செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Wednesday, June 30, 2010

மரணம்

மனித வாழ்வில் பலவிதமான நிகழ்வுகள் நடந்தாலும், முடிவில் எல்லோருக்கும் நடப்பது ஒன்றுதான்! அதுதான் மரணம்.
ஒருவர் சொன்னார் “நம் உடலில் இருந்து எது வெளியே சென்றாலும்
சுகமாக இருக்கிறது, சிறு நீர், மலம், ஏப்பம், இன்னும் சில,
அப்போதெல்லாம் நமக்கு, மிவும் சுகமாக இருக்கிற்து.
உயிர் போனால் எவ்வளவு சுகமாக இருக்கும்?
(என்ன உதைக்க வேண்டும்போல் கோபம் வருகிறதா?)
அப்படிப்பட்ட மரணத்தை மனிதர்கள் ஏன் தாங்களாகவே
தேடிக்கொள்கிறார்கள்? எந்த மிருகமாவது தானாக மரணத்தை
தேடிக்கொண்டதாக செய்தி உண்டா?
ஆனால் மனிதன் மட்டுமே மரணத்தை தானாகத்தேடிக்கொள்ளும்
பிராணியாக உள்ளான்.
காரணம் அவனது ஆறாம் அறிவு. மானம், கௌரவம், மற்றும் இதுபோன்ற
பகுத்தறிவு சம்பந்தப்பட்ட விசயங்கள்தான், மனிதனின் தற்கொலையை
முடிவு செய்கின்றன. தற்கொலைகளில்தான் எத்தனைவகை!
அவைகளை விளக்கினால் தனி அத்தியாயமே போடவேண்டும்.
தற்கொலைகளை தவிற்ப்பதற்கு மனதை சுத்தமாகவும், எதிலும்
தெளிவாக சிந்திக்கும் திறனும் கொண்டு நல்லமுறையில்
யோசித்து செயல்பட்டால் தற்கொலைகள் மனிதவாழ்வில்
இல்லாமல் போய்விடும்.

Tuesday, June 29, 2010

அழகான அனுபவம்.


○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும்
வேலை ஒரு அழகான அனுபவமாகும்
.


பாடம்
○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
ஆனால் வாழ்க்கையில்,
தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்
!

கடவுள்
○ வழிபாடு செய்யுங்கள்..
கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.
ஆனால் சேவை செய்யுங்கள்..
கடவுள் உங்கள் அருகில் வருவார்!
-அன்னை தெரசா
.

○ கடவுளுக்கும் மரணம் வரும்.
ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!
தந்தை பெரியார்.




வேலைக்காக
○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்
கோயில் சுற்றும் அம்மா.


குழந்தை
○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!
கலீல் ஜிப்ரான்.

Wednesday, June 23, 2010








நாங்கள் சென்ற மாதம் வட இந்திய ச்ற்று பயணம் சென்றோம்
அவைகளில் சில படங்கள் உங்களுக்காக.