செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Saturday, February 6, 2010

Saturday, February 6, 2010
இன்று (31.01.2010) எனது பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறேன். மிக ந்ல்ல பணி.
ஆனால் மன உளைச்சல்கள் அதிகம்.
உண்மையில் சொல்வதென்றால்,
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான
மனிதர்களை சந்திக்கவேண்டி இருந்தது.
அவர்கள் அனைவரும் வாழ்க்கையின்
அனைத்து நிலைகளிலும் இருந்து வருபவர்கள்.
எல்லோரையும் சமாளிக்கவேண்டும்.
அதே நேரம், நிர்வாகத்தின் பெயரையும்
காப்பாற்றவேண்டும்.
ஆனால் அது, கம்பிமேல் ந்டக்கும்
கழைக்கூத்தாடியின் நிலைதான்.
இந்த நிலையில் நிர்வாகத்தின்
அலுவலர்களுக்கும் சரியான முறையில்
மரியாதையும், பணியில் தவறாமையும்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதனையும் மீறி ஏதாவது ந்டந்தால்
உடன் பணி நீக்கம்தான்!
நமக்காகவும், நமது குடும்பத்தாருக்காகவும்
அத்தனை அவமானங்களையும்
பொறுத்துக்கொண்டு, தலைவிதியை
நொந்துகொண்டு அனைத்தையும்
பொறுத்துக்கொள்ளவேண்டும்.
மேலும், ந்மக்கு மேல் நிலையில் உள்ள
அலுவலர்களை மிவும் மரியாதையுடன்
எதிர்கொள்ளவேண்டும். இல்லையென்றால்
அனைத்து விதாமான கொடுமைககளும்
நமக்கு எதிராக அறங்கேற்றப்படும்.
மேலும் சங்க நிர்வாகிகளையும்
தவறாமல் மிக மரியாதையுடன்
கையாளவேண்டும். இல்லையென்றால்
நாம் நிம்மதியாக பணிபுரியமுடியாது!
இதனிடையில் காவல்துறை, மற்றும் உள்ள
அனைத்து அரசு அலுவலர்கள்,அதிகாரிகள்
ஆகியோரையும் திருப்திபடுத்தவேண்டும்.
மேலும் வழியில் மாணவர்கள் மற்றும்
அனைத்து விதமான மனிதர்களையும்
சமாளிக்கவேண்டும். அப்படி என்னதான் பணி
என்று கேட்கிறீர்களா?
அதுதான் அய்யா மாநகர போக்குவரத்து
நடத்துனர்பணி அய்யா!.
Posted by mathileo at 2:54 AM 0 comments

1 comment:

  1. ஓய்வுக்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அய்யா நானும் சென்னையில் மாநகர பேருந்தில் சென்றுவந்தவன் அதில் எத்தனை முறை உங்களுடன் பயணமோ?

    --

    ReplyDelete