செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Saturday, October 31, 2009

இது கேரளாவில் நடைபெற்ற திருமணம். இதில் என்ன சிறப்பு உள்ளது என்று நீங்களெ தெரிந்துகொள்ளுங்கள்!





இவை மிக வித்யாசமகவும், என்னைக் கவர்ந்ததாலும்! நீங்களும் அனுபவியுங்கள்!





இந்த மாதிரியான் காட்சிகளை நாம் இந்தியாவிலன்றி வேறெங்கும் காண்முடியாது!













Friday, October 30, 2009

நூறாண்டுகளுக்கு முன்பு ந்ம் சென்னை.
எவ்வளவுஅருமையாக உள்ளது என்று பாருங்கள்!










நான் தமிழில் தாயைபற்றி பல கவிதைகள் படித்துள்ளேன். ஆனால் ஆங்கிலத்தில் என்னைக்கவர்ந்த ஒன்று. நீங்களும் அனுபவியுங்கள்


MOTHER
“ A long wish, for happiness on
Your birthday mother.
There is magic in a mother’s touch
And sunshine in her smile.
There is love in everything she does
To make our lives worthwhile
We can find both hope and courage
Just by looking in her eyes.
Her laughter is a source of joy,
Her words are warm and wise.
There is kindness and compassion
To be found in her embrace ,
And we see the light of heaven
Shining from a mother’s face
Missing you a lot mom
From your loving son.”
- By unknown
எம்பெருமான்
உண்ணும் சோறும் பருகும் நீரும் திண்ணும் வெற்றிலையும் - எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணிணுள் அவன் சீர் வளமிக்க அவனூர் வினவ
திண்ணம் என் இள்மான் புகுமூர் திருகோளூரே!



அரசியல் வாதி
நாக்கினால் ஊரையே நாட்டித்திரட்டுவான்
நாக்குக்கும் வெற்றி தந்து
நாடகக்காரன் வேடத்தில் நின்றவன் நடிப்புக்கும்
வெற்றி தந்து
தூக்கினால் மெலெழும் ஓட்டை
துருத்திக்கும்
தூக்கத்தில் வெற்றி தந்து
தூயவர் வாழ்க்கையில் தோல்விமேல் தோல்வியே
தொடுத்து வைக்கின்ற
கலையே! வாக்கிலா
வாக்கிலா செல்வமே! மனமிலாத் தெய்வமே!
வடிவான மஞ்சள் நிலவே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல்
தாலாட்டும்
மதுரை மீனாட்சி உமையே!


பாராட்டு
நேசனை காணாவிடத்தில்
நெஞ்சார துதித்த்ல்
ஆசானை எவ்விடத்தும் - அப்படியே
வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!


வாயு மைந்தன்
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக , ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு - அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான்,

அவன் எம்மை அளித்துக்காப்பான்!

வருங்காலத் தூண்கள்

நான் தினமும் பயணம் செய்யும் பேருந்தில்
சென்னையின் நான்கு மகளிர் கல்லூரி மாணவிகளும்
மாநிலக்கல்லூரி மணவர்களும் பயணம் செய்கிறார்கள்
தினசரி மாணவர்கள் தவறாமல், கைபேசி உதவியினால்
அனைவரும் அந்த பேருந்தில்
சேர்ந்து விடுவார்கள்.

பின்னர் அவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு
அள்வே கிடையாது. மிக மட்டரகமாக இட்டுக்கட்டிய
பாடல்களை பாடிக்கொண்டும், தமிழில் எத்த்னை
வசை மொழிகள் உள்ளனவோ அத்தனையையும்
சப்தமாக பேசிக்கொண்டும்.(இவர்கள் வீட்டில்
தாய், சகோதரி, தந்தை முன்பாக இவ்வாறுதான்
பேசுவார்களா?
ர்களா)
அந்த ஒரு மணி நேரப்பயணமும் நமக்கு
கொடுமயான நரகம்தான்.
இத்னை போக்குவரத்து நிர்வாகமும், அரசும், ஏன்
காவல்துறையும் கண்டு கொள்வதே இல்லை
பயணிகளும் வாய்மூடி மௌனிகளாக
தலைகுனிந்து இந்த நரகத்தை
தினசரி பொறுத்துக்கொண்டு,
தங்களின் தலைவிதியை நொந்துகொண்டு
பயணம் செய்கிறார்கள்
இவர்கள்தான் நம் நாட்டின் வருங்காலத்தூண்கள்
பேருந்து எண் 27H
ஆவடி- அண்ணா சதுக்கம்

Thursday, October 29, 2009

காவல் துறை கண்ணியம்

நான் சென்ற மாதம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது, அருகெ நின்ற மாம்பழ வியாபாரம் செய்யும் இளைஞனிடம், ஒரு காவல் துறை வாகனம் வந்து நின்றது.அதன் உள்ளே ஒரு அதிகாரி, அவர் இருக்கையின் பின்புறம் பூத்துண்டு போர்த்தி பந்தாவாக அமர்ந்திருந்தார். பொதுவாக அரசுஅதிகாரிகள் தங்களின் அலுவலக வாகனத்தில் செல்லும்போது, தங்களின் இருக்கயில் பூத்துண்டுகளை போடுவது, ’பாருங்கள் நான் பெரிய அதிகாரி வறுகிறேன் என்று பந்தா காட்டத்தான்.வாகன ஓட்டுனர் ஏதொ சைகை செய்து அதிகாரி பழம் கேட்கிறார் என்றார். அவரும் பெரியதும் அல்லாத சிறியதும் அல்லாத ஒரு பழத்தை எடுத்து நறுக்கி அவரிடம் கொடுத்தார். அப்போது வாகனத்தில் இருந்த அதிகாரி, ஓட்டுனரை அழைத்து பெரிய பழத்தை காட்டி சைகை செய்தார். நான் அந்த அதிகாரியையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஓட்டுனர் பழவியாபாரியிடம், பெரிய பழத்தை காட்டி, அதை கொடு என்றார்.அவனும் முகச்சுழிப்புடன் அதை எடுத்து வேண்டாவெறுப்பாக நறுக்கிக் கொடுத்தான்.னான் பார்த்துக்கொண்டிருந்தது அந்த அதிகாரிக்கு என்னவோபோல் இருந்ததால் அவர் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டார். வெட்கமில்லாமல் இரண்டு பழஙளையும் வாங்கிக்கொண்டு சென்றனர். இதில் உள்ள விசயம்.அந்த அதிகாரிக்கு குறைந்த பட்சம் 25,000 சம்பள்ம் இருக்கும். அவர் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பார். பத்து ரூபாய் பழத்திற்கு பிட்ச்ஹை எடுக்க வேண்டுமா? அவரால் அந்த பத்து ரூபாய் கொடுத்து வாஙமுடியாதா? வாழ்க ஜனநாயகம்! வாழ்க அரசு அதிகாரிகள்!