உண்ணும் சோறும் பருகும் நீரும் திண்ணும் வெற்றிலையும் - எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணிணுள் அவன் சீர் வளமிக்க அவனூர் வினவ
திண்ணம் என் இள்மான் புகுமூர் திருகோளூரே!
அரசியல் வாதி
நாக்கினால் ஊரையே நாட்டித்திரட்டுவான்
நாக்குக்கும் வெற்றி தந்து
நாடகக்காரன் வேடத்தில் நின்றவன் நடிப்புக்கும்
வெற்றி தந்து
தூக்கினால் மெலெழும் ஓட்டை
துருத்திக்கும்
தூக்கத்தில் வெற்றி தந்து
தூயவர் வாழ்க்கையில் தோல்விமேல் தோல்வியே
தொடுத்து வைக்கின்ற
கலையே! வாக்கிலா
வாக்கிலா செல்வமே! மனமிலாத் தெய்வமே!
வடிவான மஞ்சள் நிலவே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டும்
மதுரை மீனாட்சி உமையே!
பாராட்டு
நேசனை காணாவிடத்தில்
நெஞ்சார துதித்த்ல்
ஆசானை எவ்விடத்தும் - அப்படியே
வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!
வாயு மைந்தன்
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக , ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு - அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்,
அவன் எம்மை அளித்துக்காப்பான்!
உண்ணும் சோறும் பருகும் நீரும் திண்ணும் வெற்றிலையும் - எல்லாம்
ReplyDeleteகண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணிணுள் அவன் சீர் வளமிக்க அவனூர் வினவ
திண்ணம் என் இள்மான் புகுமூர் திருகோளூரே! == ===இந்த பாடலில் சில அச்சுப் பிழைகள் உள்ளன.
பதம் பிரித்து அந்த பாடலைத் தருகிறேன்:
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும்-எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இள மான் புகும் ஊர் திருகோளூரே!
--கடுகு
பிகு: நிறைய எழுதுங்கள்