Thursday, October 29, 2009
காவல் துறை கண்ணியம்
நான் சென்ற மாதம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது, அருகெ நின்ற மாம்பழ வியாபாரம் செய்யும் இளைஞனிடம், ஒரு காவல் துறை வாகனம் வந்து நின்றது.அதன் உள்ளே ஒரு அதிகாரி, அவர் இருக்கையின் பின்புறம் பூத்துண்டு போர்த்தி பந்தாவாக அமர்ந்திருந்தார். பொதுவாக அரசுஅதிகாரிகள் தங்களின் அலுவலக வாகனத்தில் செல்லும்போது, தங்களின் இருக்கயில் பூத்துண்டுகளை போடுவது, ’பாருங்கள் நான் பெரிய அதிகாரி வறுகிறேன் என்று பந்தா காட்டத்தான்.வாகன ஓட்டுனர் ஏதொ சைகை செய்து அதிகாரி பழம் கேட்கிறார் என்றார். அவரும் பெரியதும் அல்லாத சிறியதும் அல்லாத ஒரு பழத்தை எடுத்து நறுக்கி அவரிடம் கொடுத்தார். அப்போது வாகனத்தில் இருந்த அதிகாரி, ஓட்டுனரை அழைத்து பெரிய பழத்தை காட்டி சைகை செய்தார். நான் அந்த அதிகாரியையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஓட்டுனர் பழவியாபாரியிடம், பெரிய பழத்தை காட்டி, அதை கொடு என்றார்.அவனும் முகச்சுழிப்புடன் அதை எடுத்து வேண்டாவெறுப்பாக நறுக்கிக் கொடுத்தான்.னான் பார்த்துக்கொண்டிருந்தது அந்த அதிகாரிக்கு என்னவோபோல் இருந்ததால் அவர் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டார். வெட்கமில்லாமல் இரண்டு பழஙளையும் வாங்கிக்கொண்டு சென்றனர். இதில் உள்ள விசயம்.அந்த அதிகாரிக்கு குறைந்த பட்சம் 25,000 சம்பள்ம் இருக்கும். அவர் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பார். பத்து ரூபாய் பழத்திற்கு பிட்ச்ஹை எடுக்க வேண்டுமா? அவரால் அந்த பத்து ரூபாய் கொடுத்து வாஙமுடியாதா? வாழ்க ஜனநாயகம்! வாழ்க அரசு அதிகாரிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment