Tuesday, July 6, 2010
கிராம்ம் எப்படி இருக்கும் எதுவும் என்க்குத்தெரியாது. அம்மா கடையை விற்றுவிட்டு மற்ற் பொருட்களை பண்மாக மாற்றிக்கொண்டு சில மாத்ங்கள் கழித்து அண்ணன் ம்ற்றும் அப்பாவுடன் வந்துசேர்ந்தாகள். அங்கு இருந்த ஆரம்ப்பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார்கள். அண்ண்னை வாடிப்பட்டியில் உள்ள உயர்நிலைபள்ளியில் சேர்ந்தார். நானும் அண்ணனும் ஓரள்விற்கு படிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்துடன் ஒன்ற ஆரம்பித்தோம். வடுகபட்டி, அது கிராம்மல்ல சொர்கம். அங்கு பச்சைபசேல் என்ற் வயல்கள். முல்லை பெரியார் வாய்க்கால். அத்ன்பின் மலைகள் என அனைத்து அழகுகளுடன் அமைந்த கிராமம். பள்ளி சென்ற நேரம் த்விர மற்ற நேரங்களில் விளையாட்டில் கழித்தோம். முத்லில் நீச்ச்சல். தற்போது உள்ளதுபோல் நீச்சல் கற்றுக்கொள்ள பள்ளிகள் கிடையாது. ஏற்கனவெ நீச்சல் தெரிந்த பையன்களோடு நானும் சென்றேன். அவர்கள் ஒரு கிணற்றுக்கு சென்றார்கள். அது ஆழமாகவும் மிகப் பெரியதாகவும் இருந்தது.அவர்கள் அனைவரும் தங்களின் உடைகளை, அதாவது கால்சட்டை மற்றும் மேல்சட்டை அவ்வளவுதான்,களைந்துவிட்டு அம்மணமாக மேலிருந்து குதித்து கிண்ற்றில் நீந்தினார்கள். நான் நீச்சல் தெரியாத காரணத்தால் கிண்ற்றின் கரையில் அமர்ந்துகொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அன்று நீச்சல் கற்று கொடுத்து விடவேண்டும் என்று முடிவுசெய்திருந்த செய்தி எனக்குத்தெரியாது. ஒருவன் வந்து என்னை கிணற்றின் அருகில் வருமாறு அழைத்தான். அவர்களின் த்ந்திரம் தெரியாமல் நானும் அங்கு சென்றேன். அவன் என்னிடம் ‘கிணற்றின் உள்ளேபார்.தரை தெரிகிறதா?’ என்றான். நானும் அவன் சொன்னதை ந்ம்பி, மெதுவாக எட்டிப்பார்த்தேன். அடுத்த நிமிடம் நான் கிணற்றின் உள்ளெ இருந்தேன். அவன் என்னை கிணற்றின் உள்ளெ த்ள்ளிவிட்டுவிட்டான். நான் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உள்ளெ இருந்த மற்றவர்கள் என்னை தூக்கி எவ்வாறு நீச்சல் அடிப்பது என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவ்வாறுதான் அவர்கள் நீச்சல் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். பின்னர் நானும் பல நண்பர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன்.
Monday, July 5, 2010
வலியது வெல்லும் 1 எல்லோரும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவார்கள். ஆனால் நாங்கள் நகரத்திலிருந்து கிராமத்திற்கு குடிபெயர்ந்தோம். இது ந்டந்த்து 1940களில், சுத்ந்திரத்திற்கு முன்பு. அப்போது மவுண்ரோடில் (தற்போதய அண்ணா சாலை) பழைய விலிங்டன் திரை அரங்கம் அருகே எம்.எஸ்.ஸ்டோர்என்று ஒரு கடை இருந்த்து. கடை என்றால் நீங்கள் நினைப்பது போன்று சாதரண பொட்டிக்கடைஅல்ல.அனைத்தும் ஒரே இட்த்தில் வாங்க்கூடிய கடை. அக்காலத்தில் மது அருந்துபவர்கள் மருத்துவரிடம் “இவர் கட்டாயம் மது அருந்த்வேண்டும்” என்று சான்று பெற்று,அதனை அரசு அலுவலகத்தில் சமர்ப்பித்து, பின்னர்தான் மதுவை கடைகளில் பெறமுடியும். அதுபோன்று மது வாங்குபவர்களுக்கென்று தனியாக மதுக்கடையும் அதிலிருந்தது. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த்க்கடையின் முழு பொறுப்பும் பார்த்துக்கொண்டது எங்களின் தகப்பனார். பிறகு ஏதொ காரணத்திற்காக அங்கிருந்து அவர் விலகி, த்ற்போது எல்டாம்ஸ் சாலையில் உட்புறம் திருவள்ளுவர் சாலை என்று ஒரு தெரு இபோதும் உள்ளது. அந்த்தெருவில் ஒரு ரொட்டிக்கடை(பேக்கரி)ஆரம்பித்தார். அது ந்ன்றாகவெ ந்டந்தது. ஆனால் விதி வெறுவிதமாக இருந்த்து. எங்கள் த்ந்தைக்கு டி.பி என்கிற நோய் தாக்கியது, எங்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. எங்களின் தாயார்; கடையையும்,எங்களையும்,தந்தைய்யும் கவனித்துக்கொள்வது என்பது முடியாத சூழ்நிலையில், வேறு வழியில்லாமல் குடும்பத்தை அம்மவின் ஊரில் பாட்டியிடம் அனுப்பிவிடுவது ந்ன்று முடிவு செய்து, முதலில் என்னையும் அக்காவையும் முத்லில் அனுப்பினார்கள்.அது (வடுகபட்டி மதுரையில் இருந்து 15வது மைலில் உள்ளது) வைகை அணை அருகே ஒரு வடுகபட்டி உள்ளது. அது வேறு. அதனால் எங்களின் ஊர் T. வடுகபட்டி என்று அழைக்கப்படுகிறது. அங்கே எங்களின் பாட்டி சற்று வசதியாக நிலபுலங்கலோடு இருந்தார். என்னையும் அக்காவையும் முதலில் அனுப்பியதற்கு வேறு ஒரு காரண்மும் இருந்த்து. அக்காலத்தில் நாங்கள் குடி இருந்த பகுதிகளில் யானைக்கால் நோய் அதிகமாக இருந்த்து. வயதுவந்த பெண்ணுக்கு அந்நோய் வந்துவிட்டால் பின்னர் யார் திருமணம் செய்து கொள்வார்கள். எனவேதான் எங்கள் இருவரையும் முதலில் அனுப்பினார்கள்
அப்போது எனக்கு வயது ஜந்து.
அப்போது எனக்கு வயது ஜந்து.
Wednesday, June 30, 2010
மரணம்
மனித வாழ்வில் பலவிதமான நிகழ்வுகள் நடந்தாலும், முடிவில் எல்லோருக்கும் நடப்பது ஒன்றுதான்! அதுதான் மரணம்.
ஒருவர் சொன்னார் “நம் உடலில் இருந்து எது வெளியே சென்றாலும்
சுகமாக இருக்கிறது, சிறு நீர், மலம், ஏப்பம், இன்னும் சில,
அப்போதெல்லாம் நமக்கு, மிவும் சுகமாக இருக்கிற்து.
உயிர் போனால் எவ்வளவு சுகமாக இருக்கும்?
(என்ன உதைக்க வேண்டும்போல் கோபம் வருகிறதா?)
அப்படிப்பட்ட மரணத்தை மனிதர்கள் ஏன் தாங்களாகவே
தேடிக்கொள்கிறார்கள்? எந்த மிருகமாவது தானாக மரணத்தை
தேடிக்கொண்டதாக செய்தி உண்டா?
ஆனால் மனிதன் மட்டுமே மரணத்தை தானாகத்தேடிக்கொள்ளும்
பிராணியாக உள்ளான்.
காரணம் அவனது ஆறாம் அறிவு. மானம், கௌரவம், மற்றும் இதுபோன்ற
பகுத்தறிவு சம்பந்தப்பட்ட விசயங்கள்தான், மனிதனின் தற்கொலையை
முடிவு செய்கின்றன. தற்கொலைகளில்தான் எத்தனைவகை!
அவைகளை விளக்கினால் தனி அத்தியாயமே போடவேண்டும்.
தற்கொலைகளை தவிற்ப்பதற்கு மனதை சுத்தமாகவும், எதிலும்
தெளிவாக சிந்திக்கும் திறனும் கொண்டு நல்லமுறையில்
யோசித்து செயல்பட்டால் தற்கொலைகள் மனிதவாழ்வில்
இல்லாமல் போய்விடும்.
மனித வாழ்வில் பலவிதமான நிகழ்வுகள் நடந்தாலும், முடிவில் எல்லோருக்கும் நடப்பது ஒன்றுதான்! அதுதான் மரணம்.
ஒருவர் சொன்னார் “நம் உடலில் இருந்து எது வெளியே சென்றாலும்
சுகமாக இருக்கிறது, சிறு நீர், மலம், ஏப்பம், இன்னும் சில,
அப்போதெல்லாம் நமக்கு, மிவும் சுகமாக இருக்கிற்து.
உயிர் போனால் எவ்வளவு சுகமாக இருக்கும்?
(என்ன உதைக்க வேண்டும்போல் கோபம் வருகிறதா?)
அப்படிப்பட்ட மரணத்தை மனிதர்கள் ஏன் தாங்களாகவே
தேடிக்கொள்கிறார்கள்? எந்த மிருகமாவது தானாக மரணத்தை
தேடிக்கொண்டதாக செய்தி உண்டா?
ஆனால் மனிதன் மட்டுமே மரணத்தை தானாகத்தேடிக்கொள்ளும்
பிராணியாக உள்ளான்.
காரணம் அவனது ஆறாம் அறிவு. மானம், கௌரவம், மற்றும் இதுபோன்ற
பகுத்தறிவு சம்பந்தப்பட்ட விசயங்கள்தான், மனிதனின் தற்கொலையை
முடிவு செய்கின்றன. தற்கொலைகளில்தான் எத்தனைவகை!
அவைகளை விளக்கினால் தனி அத்தியாயமே போடவேண்டும்.
தற்கொலைகளை தவிற்ப்பதற்கு மனதை சுத்தமாகவும், எதிலும்
தெளிவாக சிந்திக்கும் திறனும் கொண்டு நல்லமுறையில்
யோசித்து செயல்பட்டால் தற்கொலைகள் மனிதவாழ்வில்
இல்லாமல் போய்விடும்.
Tuesday, June 29, 2010
அழகான அனுபவம்.
○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும்
வேலை ஒரு அழகான அனுபவமாகும்.
பாடம்
○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
ஆனால் வாழ்க்கையில்,
தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்!
கடவுள்
○ வழிபாடு செய்யுங்கள்..
கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.
ஆனால் சேவை செய்யுங்கள்..
கடவுள் உங்கள் அருகில் வருவார்!
-அன்னை தெரசா.
○ கடவுளுக்கும் மரணம் வரும்.
ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!
தந்தை பெரியார்.
வேலைக்காக
○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்
கோயில் சுற்றும் அம்மா.
குழந்தை
○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!
கலீல் ஜிப்ரான்.
○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும்
வேலை ஒரு அழகான அனுபவமாகும்.
பாடம்
○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
ஆனால் வாழ்க்கையில்,
தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்!
கடவுள்
○ வழிபாடு செய்யுங்கள்..
கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.
ஆனால் சேவை செய்யுங்கள்..
கடவுள் உங்கள் அருகில் வருவார்!
-அன்னை தெரசா.
○ கடவுளுக்கும் மரணம் வரும்.
ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!
தந்தை பெரியார்.
வேலைக்காக
○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்
கோயில் சுற்றும் அம்மா.
குழந்தை
○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!
கலீல் ஜிப்ரான்.
Saturday, February 6, 2010
Saturday, February 6, 2010
இன்று (31.01.2010) எனது பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறேன். மிக ந்ல்ல பணி.
ஆனால் மன உளைச்சல்கள் அதிகம்.
உண்மையில் சொல்வதென்றால்,
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான
மனிதர்களை சந்திக்கவேண்டி இருந்தது.
அவர்கள் அனைவரும் வாழ்க்கையின்
அனைத்து நிலைகளிலும் இருந்து வருபவர்கள்.
எல்லோரையும் சமாளிக்கவேண்டும்.
அதே நேரம், நிர்வாகத்தின் பெயரையும்
காப்பாற்றவேண்டும்.
ஆனால் அது, கம்பிமேல் ந்டக்கும்
கழைக்கூத்தாடியின் நிலைதான்.
இந்த நிலையில் நிர்வாகத்தின்
அலுவலர்களுக்கும் சரியான முறையில்
மரியாதையும், பணியில் தவறாமையும்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதனையும் மீறி ஏதாவது ந்டந்தால்
உடன் பணி நீக்கம்தான்!
நமக்காகவும், நமது குடும்பத்தாருக்காகவும்
அத்தனை அவமானங்களையும்
பொறுத்துக்கொண்டு, தலைவிதியை
நொந்துகொண்டு அனைத்தையும்
பொறுத்துக்கொள்ளவேண்டும்.
மேலும், ந்மக்கு மேல் நிலையில் உள்ள
அலுவலர்களை மிவும் மரியாதையுடன்
எதிர்கொள்ளவேண்டும். இல்லையென்றால்
அனைத்து விதாமான கொடுமைககளும்
நமக்கு எதிராக அறங்கேற்றப்படும்.
மேலும் சங்க நிர்வாகிகளையும்
தவறாமல் மிக மரியாதையுடன்
கையாளவேண்டும். இல்லையென்றால்
நாம் நிம்மதியாக பணிபுரியமுடியாது!
இதனிடையில் காவல்துறை, மற்றும் உள்ள
அனைத்து அரசு அலுவலர்கள்,அதிகாரிகள்
ஆகியோரையும் திருப்திபடுத்தவேண்டும்.
மேலும் வழியில் மாணவர்கள் மற்றும்
அனைத்து விதமான மனிதர்களையும்
சமாளிக்கவேண்டும். அப்படி என்னதான் பணி
என்று கேட்கிறீர்களா?
அதுதான் அய்யா மாநகர போக்குவரத்து
நடத்துனர்பணி அய்யா!.
Posted by mathileo at 2:54 AM 0 comments
இன்று (31.01.2010) எனது பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறேன். மிக ந்ல்ல பணி.
ஆனால் மன உளைச்சல்கள் அதிகம்.
உண்மையில் சொல்வதென்றால்,
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான
மனிதர்களை சந்திக்கவேண்டி இருந்தது.
அவர்கள் அனைவரும் வாழ்க்கையின்
அனைத்து நிலைகளிலும் இருந்து வருபவர்கள்.
எல்லோரையும் சமாளிக்கவேண்டும்.
அதே நேரம், நிர்வாகத்தின் பெயரையும்
காப்பாற்றவேண்டும்.
ஆனால் அது, கம்பிமேல் ந்டக்கும்
கழைக்கூத்தாடியின் நிலைதான்.
இந்த நிலையில் நிர்வாகத்தின்
அலுவலர்களுக்கும் சரியான முறையில்
மரியாதையும், பணியில் தவறாமையும்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதனையும் மீறி ஏதாவது ந்டந்தால்
உடன் பணி நீக்கம்தான்!
நமக்காகவும், நமது குடும்பத்தாருக்காகவும்
அத்தனை அவமானங்களையும்
பொறுத்துக்கொண்டு, தலைவிதியை
நொந்துகொண்டு அனைத்தையும்
பொறுத்துக்கொள்ளவேண்டும்.
மேலும், ந்மக்கு மேல் நிலையில் உள்ள
அலுவலர்களை மிவும் மரியாதையுடன்
எதிர்கொள்ளவேண்டும். இல்லையென்றால்
அனைத்து விதாமான கொடுமைககளும்
நமக்கு எதிராக அறங்கேற்றப்படும்.
மேலும் சங்க நிர்வாகிகளையும்
தவறாமல் மிக மரியாதையுடன்
கையாளவேண்டும். இல்லையென்றால்
நாம் நிம்மதியாக பணிபுரியமுடியாது!
இதனிடையில் காவல்துறை, மற்றும் உள்ள
அனைத்து அரசு அலுவலர்கள்,அதிகாரிகள்
ஆகியோரையும் திருப்திபடுத்தவேண்டும்.
மேலும் வழியில் மாணவர்கள் மற்றும்
அனைத்து விதமான மனிதர்களையும்
சமாளிக்கவேண்டும். அப்படி என்னதான் பணி
என்று கேட்கிறீர்களா?
அதுதான் அய்யா மாநகர போக்குவரத்து
நடத்துனர்பணி அய்யா!.
Posted by mathileo at 2:54 AM 0 comments
Thursday, January 7, 2010
Subscribe to:
Posts (Atom)







