Tuesday, July 6, 2010
கிராம்ம் எப்படி இருக்கும் எதுவும் என்க்குத்தெரியாது. அம்மா கடையை விற்றுவிட்டு மற்ற் பொருட்களை பண்மாக மாற்றிக்கொண்டு சில மாத்ங்கள் கழித்து அண்ணன் ம்ற்றும் அப்பாவுடன் வந்துசேர்ந்தாகள். அங்கு இருந்த ஆரம்ப்பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார்கள். அண்ண்னை வாடிப்பட்டியில் உள்ள உயர்நிலைபள்ளியில் சேர்ந்தார். நானும் அண்ணனும் ஓரள்விற்கு படிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்துடன் ஒன்ற ஆரம்பித்தோம். வடுகபட்டி, அது கிராம்மல்ல சொர்கம். அங்கு பச்சைபசேல் என்ற் வயல்கள். முல்லை பெரியார் வாய்க்கால். அத்ன்பின் மலைகள் என அனைத்து அழகுகளுடன் அமைந்த கிராமம். பள்ளி சென்ற நேரம் த்விர மற்ற நேரங்களில் விளையாட்டில் கழித்தோம். முத்லில் நீச்ச்சல். தற்போது உள்ளதுபோல் நீச்சல் கற்றுக்கொள்ள பள்ளிகள் கிடையாது. ஏற்கனவெ நீச்சல் தெரிந்த பையன்களோடு நானும் சென்றேன். அவர்கள் ஒரு கிணற்றுக்கு சென்றார்கள். அது ஆழமாகவும் மிகப் பெரியதாகவும் இருந்தது.அவர்கள் அனைவரும் தங்களின் உடைகளை, அதாவது கால்சட்டை மற்றும் மேல்சட்டை அவ்வளவுதான்,களைந்துவிட்டு அம்மணமாக மேலிருந்து குதித்து கிண்ற்றில் நீந்தினார்கள். நான் நீச்சல் தெரியாத காரணத்தால் கிண்ற்றின் கரையில் அமர்ந்துகொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அன்று நீச்சல் கற்று கொடுத்து விடவேண்டும் என்று முடிவுசெய்திருந்த செய்தி எனக்குத்தெரியாது. ஒருவன் வந்து என்னை கிணற்றின் அருகில் வருமாறு அழைத்தான். அவர்களின் த்ந்திரம் தெரியாமல் நானும் அங்கு சென்றேன். அவன் என்னிடம் ‘கிணற்றின் உள்ளேபார்.தரை தெரிகிறதா?’ என்றான். நானும் அவன் சொன்னதை ந்ம்பி, மெதுவாக எட்டிப்பார்த்தேன். அடுத்த நிமிடம் நான் கிணற்றின் உள்ளெ இருந்தேன். அவன் என்னை கிணற்றின் உள்ளெ த்ள்ளிவிட்டுவிட்டான். நான் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உள்ளெ இருந்த மற்றவர்கள் என்னை தூக்கி எவ்வாறு நீச்சல் அடிப்பது என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவ்வாறுதான் அவர்கள் நீச்சல் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். பின்னர் நானும் பல நண்பர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment