செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Monday, July 5, 2010

வலியது வெல்லும் 1 ல்லோரும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவார்கள். ஆனால் நாங்கள் நகரத்திலிருந்து கிராமத்திற்கு குடிபெயர்ந்தோம். இது ந்டந்த்து 1940களில், சுத்ந்திரத்திற்கு முன்பு. அப்போது மவுண்ரோடில் (தற்போதய அண்ணா சாலை) பழைய விலிங்டன் திரை அரங்கம் அருகே எம்.எஸ்.ஸ்டோர்என்று ஒரு கடை இருந்த்து. கடை என்றால் நீங்கள் நினைப்பது போன்று சாதரண பொட்டிக்கடைஅல்ல.அனைத்தும் ஒரே இட்த்தில் வாங்க்கூடிய கடை. அக்காலத்தில் மது அருந்துபவர்கள் மருத்துவரிடம் “இவர் கட்டாயம் மது அருந்த்வேண்டும்” என்று சான்று பெற்று,அதனை அரசு அலுவலகத்தில் சமர்ப்பித்து, பின்னர்தான் மதுவை கடைகளில் பெறமுடியும். அதுபோன்று மது வாங்குபவர்களுக்கென்று தனியாக மதுக்கடையும் அதிலிருந்தது. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த்க்கடையின் முழு பொறுப்பும் பார்த்துக்கொண்டது எங்களின் தகப்பனார். பிறகு ஏதொ காரணத்திற்காக அங்கிருந்து அவர் விலகி, த்ற்போது எல்டாம்ஸ் சாலையில் உட்புறம் திருவள்ளுவர் சாலை என்று ஒரு தெரு இபோதும் உள்ளது. அந்த்தெருவில் ஒரு ரொட்டிக்கடை(பேக்கரி)ஆரம்பித்தார். அது ந்ன்றாகவெ ந்டந்தது. ஆனால் விதி வெறுவிதமாக இருந்த்து. எங்கள் த்ந்தைக்கு டி.பி என்கிற நோய் தாக்கியது, எங்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. எங்களின் தாயார்; கடையையும்,எங்களையும்,தந்தைய்யும் கவனித்துக்கொள்வது என்பது முடியாத சூழ்நிலையில், வேறு வழியில்லாமல் குடும்பத்தை அம்மவின் ஊரில் பாட்டியிடம் அனுப்பிவிடுவது ந்ன்று முடிவு செய்து, முதலில் என்னையும் அக்காவையும் முத்லில் அனுப்பினார்கள்.அது (வடுகபட்டி மதுரையில் இருந்து 15வது மைலில் உள்ளது) வைகை அணை அருகே ஒரு வடுகபட்டி உள்ளது. அது வேறு. அதனால் எங்களின் ஊர் T. வடுகபட்டி என்று அழைக்கப்படுகிறது. அங்கே எங்களின் பாட்டி சற்று வசதியாக நிலபுலங்கலோடு இருந்தார். என்னையும் அக்காவையும் முதலில் அனுப்பியதற்கு வேறு ஒரு காரண்மும் இருந்த்து. அக்காலத்தில் நாங்கள் குடி இருந்த பகுதிகளில் யானைக்கால் நோய் அதிகமாக இருந்த்து. வயதுவந்த பெண்ணுக்கு அந்நோய் வந்துவிட்டால் பின்னர் யார் திருமணம் செய்து கொள்வார்கள். எனவேதான் எங்கள் இருவரையும் முதலில் அனுப்பினார்கள்
அப்போது எனக்கு வயது ஜந்து.

No comments:

Post a Comment