செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Friday, October 1, 2010

Thursday, September 30, 2010






11
வலியது வெல்லும்


அன்று என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான ஒரு நாள். L.I.C. வேலை என்றால் சும்மாவா? அனுமதி கடிதத்தை எடுத்துக்கொண்டு அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு என்னைப்போல் பலர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சற்று பருமனாகவும், கண்ணாடி அணிந்துகொண்டும் தனியாக நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன், அவரிடம் பேசவேண்டும்போல் ஒரு ஆவல் ஏற்பட்டது. அவர் அருகில் சென்று மெதுவாக் “சார், நீங்களும் இங்கு வேலைக்கு வந்திருக்கிறீர்களா?” என்றேன். அவர் ஆமாம் என்றார். பிறகு அவர் வீடு பார்த்தசாரதி கோயில் பக்கம் என்று தெரிந்துகொண்டேன். நான் இருப்பது லாயிட்ஸ் சாலையில். இரண்டும் பக்கம்தான். ஆனால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. லாயிட்ஸ் சாலை மீனவர்களும், இஸ்லாமியர்களும், ஏழ்மையில் உள்ளவர்களும் வாழும் பகுதி. பார்த்தசாரதி கோயில் பக்கம் என்றால், பிராமனர்களும், வசதி படைத்தோரும் வாழும் பகுதி. ஆனால் இரண்டும் திருவல்லிக்கேணிதான். இரண்டுக்கும் பின்கோட் 600005 தான். சங்கராச்சாரியார் வந்தால் அயிஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் என்ற இடத்தில் தங்குவார். எல்லோரும் அவரைப்பார்கக்ச் செல்வார்கள். அவர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளவர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த்ப்பக்கம் உள்ள மீனவர்கள் மற்றும் உள்ள ஏழைகள் அவரை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அவரைப்பற்றி ஏதும் தெரியாது. அவரும் அவஎகளை கண்டுகொள்ளமாட்டார். ஏனென்றால் அவர்கள் சூத்திரர்கள். இரு பகுதிகளும் ஒரே தொகுதி, ஒரே பின்கோட், ஒரே வார்டு, ஆனால் இன்றைக்கும் சென்று பாருங்கள்,வித்தியாசம் தனியாகத்தெரியும்.
இருவரும் நண்பர்களானோம். அவர் பிராமனர், நான் வேறு சாதி. அவர் இருப்பது நகரத்தின் மிக பிரசித்தமான பகுதி. நான் இருப்பது மீனவர் குப்பம். அதையேல்லம் மீறி எங்களின் நட்பு வளர்ந்தது. இருவரும் எல்.ஜ. சி யில் சேர்ந்து பணிபுரிந்தோம்.
நாள்தோறும் இருவரும் வீட்டில் இருந்து நடந்தே அலுவலகம் செல்ல்வோம். பேருந்துக் கட்டணம் 10 பைசாதான். ஆனால் பேசிக்கொண்டே நடந்து செல்வதில் உள்ள மகிழ்ச்சி அதில் கிடைக்காத்ல்லவா/ அதற்காகத்தான். அலுவலகம் முடிந்தவுடன் மாலையில் தினமும் கடற்கரை சென்று மாலைப்பொழுதை இனிமையாககழித்து மகிழ்வோம்.. பின்னர் ஒரு சமயம் இருவரும் தபால் அலுவலகத்திற்கு வேலைக்கு மனு செய்தோம். அன்று மனு சமர்ப்பிக்க கடைசிநாள். நான் நேராக அண்ணாசாலை அஞசல்அகத்திற்கு சென்று மனுவை சமர்ப்பித்துவிட்டு பின்னர் அலவலகம் சென்றேன். அவர் (பெயர் இராம சுப்ரமணியன்) அலுவலகம் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, அனுமதிவாங்கிக்கொண்டு அஞ்சல்கம் சென்று மனுவை சமர்ப்பித்தார். அதில்தான் என் வாழ்க்கை த்டம் புரண்டது. அவசச்ரத்தில் நான் மனுவை பூர்த்திசெய்து கையொப்பமிடாமல் சமர்ப்பித்துவிட்டேன். எனவே நண்பருக்கு அந்தவேலை கிடைத்தது. எனது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் எங்களின் நட்பு மாறவில்லை.




நகைச்சுவை

ஒரு காட்டில் யானை ஒன்று குளத்தில் குளித்துக்கொண்டிருந்தது. அப்பொது ஒரு எலி குளக்கரையில் வந்து நின்று யானையைப் பார்த்து அதிகாரமாக “மேலே வா” என்றது. யானை சிறிது நேரம் யோசித்துவிட்டு, சரி போகிறான், என்னவென்றுதான் பார்ப்போமே என்று நினத்து, மெதுவாக எழுந்து கரைக்கு வந்து “என்ன விசயம்” என்று அதட்டலாக கேட்டது. ஆனால் அந்த எலி ஏதும் கூறாமல், யானையை சுற்றி சுற்றி வந்து பார்த்தது. பிறகு “சரி நீ போய் குளி” என்றது. யானைக்கு பயங்கர கோபம். ”என்ன நீ பாட்டுக்கு வந்தாய், மேலேவா என்றாய், பிறகு போ என்கிறாய், என்ன வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டாயா?” என்றது. அத்ற்கு அந்த எலி அசராமல், ”நான் ஒன்றும் உன்னை சும்மா தொந்தரவு செய்யவில்லை, நேற்று எனது ஜட்டியை காயப்போட்டிருந்தேன்,
அதைக் காணவில்லை, நீ எடுத்து போட்டுக்கொண்டாயோ என்று பார்த்தேன்” என்றது.

Monday, September 27, 2010

commenwealthgames

காமன் வெல்த் விளையட்டுகள்</span>
னக்கு ஒன்று புரியவில்லை, நமது நாடு சுதந்திரநாடா? அடிமை நாடா?. இன்னும் எதற்கு ஆங்கிலேயர்களின் அடிவருடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குபிறகும் நம்முடைய அடிமைத்தனத்தை விடமுடியவில்லை. நம் நாட்டின் ஒரு மாநிலத்தின் அளவுகூட இல்லாத நட்டிற்கு, நாம் எதற்காக இன்னும் விட்டுக்கொடுக்கவேண்டும். உடனடியாக நாம் இந்த காமன் வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறவேண்டும். இல்லையென்றால் நாம் இன்னும் அவர்களுக்கு அடிமைகள்தான் என்பது உறுதியாகிறது. இது நம் நாட்டின் நூறு கோடி மக்களுக்கும் அவமானமாகும். இந்த விளையாட்டை சார்லஸ்தான் ஆரம்பித்துவைக்கவேண்டும் என்றால் அதைவிட மீண்டும் நம் நாட்டை ஆளும் உரிமையை அவர்களிடமே கொடுத்துவிடலாம்.அவர்கள் என்ன நாம் கேட்டவுடன் நாட்டை நம்மிடம் கொடுத்துவிட்டார்களா?. எத்தனை உயிர்பலி எவ்வளவு போராட்டம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த எனக்கே இவ்வளவு ரத்தம் கொதிக்கிறது என்றால், நம் தலைவர்கள் இருந்தால் அவர்களின் மனம் எவ்வளவு கொதிக்கும்? ஆயிரம் குறைகள் நம்மிடம் இருக்கலாம் ஆனால் அதைவத்து அடுத்தவர் விளையாட இடம் கொடுக்கக்கூடாது. உடனடியாக நாம் காமன்வெல்த் அமப்பில் இருந்து வெளியேறவேண்டும். அது ஒன்றுதான் நம் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு செய்யும் மிகச்சிறந்த மரியாதையாகும்!

Sunday, September 19, 2010

10

வலியது வெல்லும்

ஒருமுறை ஏதோ விசயமாக மதுரையில், அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன். காலை ஏழு மணி இருக்கும், காபியையும், பேப்பரையும் ஒருசேர ரசித்து விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வந்தார். அக்காவை மாமி என்று அழைத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் பேச்சு முடிந்ததும் அக்கா என்னிடம், “இவர் நமது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டு பையன், இப்போ மெட்ராசில் (சென்னை) சட்டம் படிக்கிறார். நானும் அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். இருவரும் விலாசங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்து பெயர் சுல்தான் அலாவுதீன் என்று தெரிந்துகொண்டேன். மாமா வீட்டில் இருந்தால், அப்பொதெல்லாம் பயம். அளவுக்கு அதிகமாக பேசமாட்டோம். ஏதோ ரிங்மாஸ்டரைப் பார்த்த விலங்குகள்போல் அமைதியாக இருப்போம். அவ்வளவு மரியாதை. அவர் அப்போது தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக(revenue inspector) இருந்தார். பின்னர் தாசில்தாராக ஓய்வு பெற்றார். நான் சின்னப் பையன் என்பதால், பையை கொடுத்து ஆட்டுகறி மற்றும் காய்கறிகளை என்னத்தான் வாங்கிவரச்சொல்வார்கள். மாமாவுக்கு ஒரு தங்கை. என்னைவிட வயதில் மூத்தவர். கல்லூரி முடித்து வீட்டில் இருந்தார். படிப்பே இல்லாத ஒருவரை காதல் திருமணம் செய்து, மூன்றாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டார். அதை முடித்து நான் சென்னை திரும்பினேன்.

சிலநாட்களுக்குப்பிறகு, புதிய ந்ண்பரை சந்திக்க சென்றேன். அவர் சூளை பகுதியில் த்ன் ந்ண்பருடன் அறை எடுத்து த்ங்கி இருந்தார். அந்த ந்ண்பர் பாடியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.எல்லோரும் அறிமுகம் செய்துகொண்டோம். அவர் பெயர் நாரயணமூர்த்தி. இவரது உதவியால்தான், அலாவுதீன் சட்டம் படிக்கிறார் என்பதை உணர்ந்தேன். அலாவுதீனின் வாப்பா(அப்பா), காவல்துறையில் த்லைமை காவலராக இருந்தார். அவர் வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டு தனியாக இருந்தார். சூளையில் இருந்து சட்டக் கல்லூரி (பாரிமுனை) செல்ல பேருந்துக்குக்கூட காசில்லாமல் (பதினைந்து பைசா) நடந்து செல்வார்.அப்போது நானும் பலமுறை அவருடன் சென்றுள்ளேன். அது மட்டுமல்ல. பல நாட்கள் அவருடன் வகுப்புகள் இருந்து பாடம் கேட்டுள்ளேன் அவருடைய நிலைகண்டு நானும் உதவ ஆரம்பித்தேன். இந்த நட்பு வட்டத்தில் எனது அண்ணனும் சேர்ந்தார். வட்டம் பெரிதாகி ஒரு நிலயில் 15 பேர் வரை உயர்ந்தது. நாங்கள் தினசரி கடற்கரையில் சந்திக்க ஆரம்பித்தோம். ஒருவருடம் நாங்கள். 365 நாட்களும் கடற்கரையில் சந்தித்துள்ளோம். பெரும்பாலும் புகாரி ஓட்டல் பின்புறம் உள்ள மணலில்தான் அமருவோம். அங்குதான் வியாபரிகளின் தொல்லை இருக்காது. அந்த வட்டத்தில் வேலை செய்பவர், படிப்பவர், வேலை இல்லாதவர் என எல்லோரும் சமமாக பழகி வந்தோம். அவர்களில் ஒருவர்தான், நாடக எழுத்தாளராக ஆகி, பின்னர் வேதம்புதிது ப்டத்திற்கு கதை வசனம் எழுதி, அதனால் தனது டிவிஎஸ் வேலையை இழந்து தற்போது வேத்ம்புதிது கண்ணனாக இன்று திரை உலகத்தில் இருப்பவர். அப்போது எனக்கு L.I.C.யில் வேலை கிடைத்தது.