ஒருமுறை ஏதோ விசயமாக மதுரையில், அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன். காலை ஏழு மணி இருக்கும், காபியையும், பேப்பரையும் ஒருசேர ரசித்து விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வந்தார். அக்காவை மாமி என்று அழைத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் பேச்சு முடிந்ததும் அக்கா என்னிடம், “இவர் நமது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டு பையன், இப்போ மெட்ராசில் (சென்னை) சட்டம் படிக்கிறார்.”நானும் அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். இருவரும் விலாசங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்து பெயர் சுல்தான் அலாவுதீன் என்று தெரிந்துகொண்டேன். மாமா வீட்டில் இருந்தால், அப்பொதெல்லாம் பயம். அளவுக்கு அதிகமாக பேசமாட்டோம். ஏதோ ரிங்மாஸ்டரைப் பார்த்த விலங்குகள்போல் அமைதியாக இருப்போம். அவ்வளவு மரியாதை. அவர் அப்போது தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக(revenue inspector) இருந்தார்.பின்னர் தாசில்தாராக ஓய்வு பெற்றார். நான் சின்னப் பையன் என்பதால், பையை கொடுத்து ஆட்டுகறி மற்றும் காய்கறிகளை என்னத்தான் வாங்கிவரச்சொல்வார்கள். மாமாவுக்கு ஒரு தங்கை. என்னைவிட வயதில் மூத்தவர். கல்லூரி முடித்து வீட்டில் இருந்தார். படிப்பே இல்லாத ஒருவரை காதல் திருமணம் செய்து, மூன்றாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டார். அதை முடித்து நான் சென்னை திரும்பினேன்.
சிலநாட்களுக்குப்பிறகு, புதிய ந்ண்பரை சந்திக்க சென்றேன். அவர் சூளை பகுதியில் த்ன் ந்ண்பருடன் அறை எடுத்து த்ங்கி இருந்தார். அந்த ந்ண்பர் பாடியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.எல்லோரும் அறிமுகம் செய்துகொண்டோம். அவர் பெயர் நாரயணமூர்த்தி. இவரது உதவியால்தான், அலாவுதீன் சட்டம் படிக்கிறார் என்பதை உணர்ந்தேன். அலாவுதீனின் வாப்பா(அப்பா), காவல்துறையில் த்லைமை காவலராக இருந்தார். அவர் வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டு தனியாக இருந்தார். சூளையில் இருந்து சட்டக் கல்லூரி (பாரிமுனை) செல்ல பேருந்துக்குக்கூட காசில்லாமல் (பதினைந்து பைசா) நடந்து செல்வார்.அப்போதுநானும் பலமுறை அவருடன் சென்றுள்ளேன். அது மட்டுமல்ல. பல நாட்கள் அவருடன் வகுப்புகள் இருந்து பாடம் கேட்டுள்ளேன் அவருடைய நிலைகண்டு நானும் உதவ ஆரம்பித்தேன். இந்த நட்பு வட்டத்தில் எனது அண்ணனும் சேர்ந்தார். வட்டம் பெரிதாகி ஒரு நிலயில் 15 பேர் வரை உயர்ந்தது. நாங்கள் தினசரி கடற்கரையில் சந்திக்க ஆரம்பித்தோம். ஒருவருடம் நாங்கள். 365 நாட்களும் கடற்கரையில் சந்தித்துள்ளோம். பெரும்பாலும் புகாரி ஓட்டல் பின்புறம் உள்ள மணலில்தான் அமருவோம். அங்குதான் வியாபரிகளின் தொல்லை இருக்காது. அந்த வட்டத்தில் வேலை செய்பவர், படிப்பவர், வேலை இல்லாதவர் என எல்லோரும் சமமாக பழகி வந்தோம். அவர்களில் ஒருவர்தான், நாடக எழுத்தாளராக ஆகி, பின்னர்”வேதம்புதிது”ப்டத்திற்கு கதை வசனம் எழுதி, அதனால் தனது டிவிஎஸ் வேலையை இழந்து தற்போது வேத்ம்புதிது கண்ணனாக இன்று திரை உலகத்தில் இருப்பவர். அப்போது எனக்கு L.I.C.யில் வேலை கிடைத்தது.
No comments:
Post a Comment