காமன் வெல்த் விளையட்டுகள்</span>
எனக்கு ஒன்று புரியவில்லை, நமது நாடு சுதந்திரநாடா? அடிமை நாடா?. இன்னும் எதற்கு ஆங்கிலேயர்களின் அடிவருடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குபிறகும் நம்முடைய அடிமைத்தனத்தை விடமுடியவில்லை. நம் நாட்டின் ஒரு மாநிலத்தின் அளவுகூட இல்லாத நட்டிற்கு, நாம் எதற்காக இன்னும் விட்டுக்கொடுக்கவேண்டும். உடனடியாக நாம் இந்த காமன் வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறவேண்டும். இல்லையென்றால் நாம் இன்னும் அவர்களுக்கு அடிமைகள்தான் என்பது உறுதியாகிறது. இது நம் நாட்டின் நூறு கோடி மக்களுக்கும் அவமானமாகும். இந்த விளையாட்டை சார்லஸ்தான் ஆரம்பித்துவைக்கவேண்டும் என்றால் அதைவிட மீண்டும் நம் நாட்டை ஆளும் உரிமையை அவர்களிடமே கொடுத்துவிடலாம்.அவர்கள் என்ன நாம் கேட்டவுடன் நாட்டை நம்மிடம் கொடுத்துவிட்டார்களா?. எத்தனை உயிர்பலி எவ்வளவு போராட்டம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த எனக்கே இவ்வளவு ரத்தம் கொதிக்கிறது என்றால், நம் தலைவர்கள் இருந்தால் அவர்களின் மனம் எவ்வளவு கொதிக்கும்? ஆயிரம் குறைகள் நம்மிடம் இருக்கலாம் ஆனால் அதைவத்து அடுத்தவர் விளையாட இடம் கொடுக்கக்கூடாது. உடனடியாக நாம் காமன்வெல்த் அமப்பில் இருந்து வெளியேறவேண்டும். அது ஒன்றுதான் நம் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு செய்யும் மிகச்சிறந்த மரியாதையாகும்!
No comments:
Post a Comment