செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Thursday, September 30, 2010






11
வலியது வெல்லும்


அன்று என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான ஒரு நாள். L.I.C. வேலை என்றால் சும்மாவா? அனுமதி கடிதத்தை எடுத்துக்கொண்டு அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு என்னைப்போல் பலர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சற்று பருமனாகவும், கண்ணாடி அணிந்துகொண்டும் தனியாக நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன், அவரிடம் பேசவேண்டும்போல் ஒரு ஆவல் ஏற்பட்டது. அவர் அருகில் சென்று மெதுவாக் “சார், நீங்களும் இங்கு வேலைக்கு வந்திருக்கிறீர்களா?” என்றேன். அவர் ஆமாம் என்றார். பிறகு அவர் வீடு பார்த்தசாரதி கோயில் பக்கம் என்று தெரிந்துகொண்டேன். நான் இருப்பது லாயிட்ஸ் சாலையில். இரண்டும் பக்கம்தான். ஆனால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. லாயிட்ஸ் சாலை மீனவர்களும், இஸ்லாமியர்களும், ஏழ்மையில் உள்ளவர்களும் வாழும் பகுதி. பார்த்தசாரதி கோயில் பக்கம் என்றால், பிராமனர்களும், வசதி படைத்தோரும் வாழும் பகுதி. ஆனால் இரண்டும் திருவல்லிக்கேணிதான். இரண்டுக்கும் பின்கோட் 600005 தான். சங்கராச்சாரியார் வந்தால் அயிஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் என்ற இடத்தில் தங்குவார். எல்லோரும் அவரைப்பார்கக்ச் செல்வார்கள். அவர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளவர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த்ப்பக்கம் உள்ள மீனவர்கள் மற்றும் உள்ள ஏழைகள் அவரை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அவரைப்பற்றி ஏதும் தெரியாது. அவரும் அவஎகளை கண்டுகொள்ளமாட்டார். ஏனென்றால் அவர்கள் சூத்திரர்கள். இரு பகுதிகளும் ஒரே தொகுதி, ஒரே பின்கோட், ஒரே வார்டு, ஆனால் இன்றைக்கும் சென்று பாருங்கள்,வித்தியாசம் தனியாகத்தெரியும்.
இருவரும் நண்பர்களானோம். அவர் பிராமனர், நான் வேறு சாதி. அவர் இருப்பது நகரத்தின் மிக பிரசித்தமான பகுதி. நான் இருப்பது மீனவர் குப்பம். அதையேல்லம் மீறி எங்களின் நட்பு வளர்ந்தது. இருவரும் எல்.ஜ. சி யில் சேர்ந்து பணிபுரிந்தோம்.
நாள்தோறும் இருவரும் வீட்டில் இருந்து நடந்தே அலுவலகம் செல்ல்வோம். பேருந்துக் கட்டணம் 10 பைசாதான். ஆனால் பேசிக்கொண்டே நடந்து செல்வதில் உள்ள மகிழ்ச்சி அதில் கிடைக்காத்ல்லவா/ அதற்காகத்தான். அலுவலகம் முடிந்தவுடன் மாலையில் தினமும் கடற்கரை சென்று மாலைப்பொழுதை இனிமையாககழித்து மகிழ்வோம்.. பின்னர் ஒரு சமயம் இருவரும் தபால் அலுவலகத்திற்கு வேலைக்கு மனு செய்தோம். அன்று மனு சமர்ப்பிக்க கடைசிநாள். நான் நேராக அண்ணாசாலை அஞசல்அகத்திற்கு சென்று மனுவை சமர்ப்பித்துவிட்டு பின்னர் அலவலகம் சென்றேன். அவர் (பெயர் இராம சுப்ரமணியன்) அலுவலகம் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, அனுமதிவாங்கிக்கொண்டு அஞ்சல்கம் சென்று மனுவை சமர்ப்பித்தார். அதில்தான் என் வாழ்க்கை த்டம் புரண்டது. அவசச்ரத்தில் நான் மனுவை பூர்த்திசெய்து கையொப்பமிடாமல் சமர்ப்பித்துவிட்டேன். எனவே நண்பருக்கு அந்தவேலை கிடைத்தது. எனது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் எங்களின் நட்பு மாறவில்லை.

No comments:

Post a Comment