மதுவும் தமிழ்நாடும்
நான்1952 ல் பிறந்தவன். அப்போதெல்லாம்
மது என்றால் யாருக்கும் என்னவென்றே
தெரியாது. பெண்கள் குழ்ந்தை பெற்றால்,
ரகசியமாக பிஸ்கட் பிராந்தி என்று
வாங்கி வந்து, மிக மறைவாக வைத்து
அவர்களுக்கு கொடுப்பார்கள். மேலும்
ஆயுர்வேத கம்பெனிகள் தயாரிக்கும்
ஏதோ ஒரு மருந்தில் அதிக ஆல்கஹால்
உள்ள ஒன்றை, கடைக்கார்ர்கள்
விற்பார்கள்.ஆண்கள் அதை வாங்கிப் பருகி
தங்களின் மது ஆசையை தீர்த்துக்
கொள்வார்கள்.மேலும் கிராமத்தில்
யார்ரவது ராணுவத்தில் இருந்தால்,
அவர்கள் ஊருக்கு வரும்போது
கொண்டு வரும் மது குப்பிக்ச்ளுக்காக
ஒரு கூட்டம் காத்திருக்கும்.
பாண்டி, மற்றும் காரைக்காலை சுற்றி உள்ள
மாவட்டங்களை சேர்ந்தவர்கள்
அங்கு சென்று தங்களின் “தாகசாந்தியை”
தீர்த்துக்கொள்வார்கள். முதன் முதலாக
1973 ல் கருணாநிதி ஆட்சி காலதில் தான்
தமிநாட்டில் மது மக்களுக்கு
அறிமுகம் செய்யப்பட்ட்து. இன்று
எல்லா வயதினரையும் ஆட்டிப்
படைக்கும் அளவிற்கு மது சமூகத்தில்
கலந்து விட்ட்து. பின்னர் வந்த
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியவர்களுக்கும் அதை
தடுக்கும் அள்விற்கு எண்ணம் ஏற்படவில்லை.
இன்று ஒரு சமுதாயத்தையே “குடிகார”
சமுதாயமாக மற்றிய பெருமை கருணாநிதி
அவர்களையே சேரும்!
இது தான் இன்று, கள் இறக்க அனுமதி கோரி
போராட்டம் நடத்தும் அள்விற்கு வந்துவிட்ட்து!
No comments:
Post a Comment