செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Wednesday, November 18, 2009

கல்விக்கடன்
நான் ஒரு குறைந்த வருமானமுள்ள
ஒரு அரசு ஊழியன். எனது மகன் +2
தேர்வில் நல்ல மதிப்பெண்
பெற்றதால் பொறியியல் கல்லூரியில்
சேர்க்கலாம் என்று முற்சித்து, ஒருவாறாக
அந்த வேலை முடித்து,எப்படியோ ப்ணம்
கட்டியாகிவிட்டது. சரி வங்கியில் கல்விக்கடன்
பெற்லாம் என்று ஒரு வங்கிக்கு நானும் எனது மகனும்
மகனும் சென்றோம். அந்த வங்கி மேளாலர்
ஏதோ தாந்தான் அந்த வங்கிக்கு முதலாளிபோல்
அதெல்லாம் தரமுடியாது என்று ஒரேமூச்சில்
முடித்துவிட்டார். நாங்கள் இருவரும் அவர் காலில்
விழாதகுறையாக வேண்டிப்பார்த்துவிட்டோம்.
அவர் மசிவதாக இல்லை.
வேறு வழியின்றி , தலைகுனிந்து
வெளியேறினோம்.
பின்னர் வெறு ஒரு வங்கியில் சென்று( அதுவும்
ஒரு நண்பரின் சிபாரிசின் பேரில்) வேண்டினோம்.
அவர்கள் பரவாயில்லை. மொத்தக்கடனே ரூ.
96,000/- தான்.(ஆண்டிற்கு 24,000/-) . அதற்கு
ஒவ்வொரு ஆண்டும் ரூ.5000/- க்கு சேமிப்பு
ரூ.1,00,000/- க்கு ஆயுள் காப்பீடு, மேலும்
முதலாண்டு ரூ.24,000/-க்கு வட்டி, எல்லாம்
சேர்த்து கணக்கிட்டால் எங்கோ செல்லும்.
எனவே முத்லாண்டு மட்டும் கடன் பெற்று,
அடுத்த ஆண்டு முத்ல் கடன் பெறாமல்
விட்டுவிட்டேன்.
முதல் ஆண்டு ரூ.24,000/-க்கு செலவு ரூ.11,000/-.
இரண்டாம் ஆண்டு ரூ.14,000/-, மூன்றாம் ஆண்டு
ரூ.17,000/-, நான்காம் ஆண்டு ரூ.21,000/-.
இது கடனா, கந்து வட்டியா?
இதுதான் நம் நாட்டு பொதுத்துறை வங்கிகள்
.மக்களுக்கு சேவை செய்யும் நிலை.
ஒரு அரசு ஊழியனான எனக்கே இந்த கதி
என்றால்,மற்றவர்களின் நிலை, பாவம்
நம் இந்திய குடிமக்கள்.

No comments:

Post a Comment