புரியவில்லை
அடிக்கடிசலித்துக்கொள்கறாய்
’உங்களை கட்டிகொண்டு
என்ன சுகம் கண்டேன்.’
எதை வாங்கிக்கொடுத்தாலும்
குறை காண்கிறாய்
எதெற்கெடுத்தாலும்
சினம் கொள்கிறாய்
உணவு உடை உறைவிடம்
உறுதிசெய்யப்பட்டிருந்தாலும்
அடுத்தவர் வாழ்வே
உயர்வாகத்தெரிகிறது - உனக்கு
பல ஆண்டுகள்
பொறுமையாயிருந்தும்
விட்டுக்கொடுத்தும்
அனுசரித்துபோயும்
புகைப்படங்களில் மட்டுமே
மகிழ்ச்சியாய் இருக்கிறோம்
நீயும் நானும்-புன்னகையோடு
இறுதிவரை
உன் அன்பை என்னால்
புரிந்துகொள்ளமுடியவில்லை
இனியும் புரிந்துகொள்ள முடியாது
சுற்றி இருப்பவர்கள் முன்
நீ கதறி ஒப்பாரி வைக்கும்போது
நான் சவமாய்!
No comments:
Post a Comment