ஆண்மகன்
உலகில் குடும்பம் என்பது பெரும்பாலும்
ஆணின் உழைப்பு,பெண்ணின் அரவணைப்பு
இரண்டும் சேர்ந்ததுதான் என்பது உலக மரபு!
ஆனால் உண்மையில் நடப்பது வேறு மாதிரி!.
சாதாரண கீழ் ந்டுத்தர வருவாய் பிரிவில்
உள்ளவர்கள் வாழ்க்கை மிகவும் சிக்கலானது.
கணவன் ஏதோ சம்பாதித்துக்கொண்டுவந்து
கொடுப்பான். அதை மனைவி வைத்துக்கொண்டு
சமாளிப்பாள். இதுதான் ந்டைமுறை.
ஒரு நாள் அந்த் வீட்டில் குழ்ந்தைக்கு பால்
டப்பா தீர்ந்துவிட்டது. மனைவி கணவனிடம்
”மாலை வரும்போது பால் டப்பா வாங்கி
வாருங்கள்” என்று சொல்வாள். அத்தோடு
அவள் கவலை முடிந்துவிடும். ஆனால்
அந்த கணவன், அன்றைய தனது பணியை
முடித்து விட்டு பின்னர் குழந்தைக்கு பால்
டப்பா வாங்கியாக வேண்டும். ஆனால் அவனிடம்
பணம் இல்லை. பின்னர் யார்யாரிடமோ கேட்டு
ஒரு வழியாக பணம் புரட்டி, அதன் பின்னர்
கடைக்கு சென்று (அப்போதெல்லாம் பால் டப்பாக்கள்
கிடைப்பது மிகவும் அரிது) கடைக்காரரிடம்
கெஞ்சி அதனைப் பெற்று, அவன் வீடு
வரும்போது, ஏதோ உலகையே வென்றதுபோல்
தோன்றும்.
உண்மையில் இதுதான் சராசரி இந்தியனின்
பொருளாதார மற்றும் சமூக சூழ்ல்!
No comments:
Post a Comment