செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Thursday, July 15, 2010

. 5. ங்கள் கிராமத்தின் அருகே மலைகள் உள்ளன என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன். அடுத்து எங்களின் பய்ணம் அங்குதான். முத்ல் நாளே நாங்கள் தீர்மானித்துவிடுவோம். நாளை மலைக்கு செல்வதென்று. ம்றுநாள் காலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலை உணவு உண்டுவிடுவோம். ஏனென்றால் மாலை வீடு திரும்ப நேரமாகிவிடும். காலை 8மணி அளவில் புறப்பட்டுவிடுவோம். வயல்களின் வலியாக நடந்து சென்று ஆற்றை கடக்கவேண்டும்அதற்கு(ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில்) ஆற்றின் குறுக்காக எங்கே பாலம் உள்ளது என்று பார்த்து, பின்னர் அதன் வழியாக கடந்துசெல்ல வேண்டும். இதில் ஒரு விசயம், ராமசாமி என்று ஒரு உறவுக்காரப்பையன்.அவன் எங்களுடன் பள்ளிக்கு வருவதைத்தவிர வேறு எங்கும் வரமாட்டான். நோஞ்சான், ஆனால நன்றாக படிப்பான். பள்ளியில் நான், ராமசாமி, ரத்தினம் என்று ஒரு தோழி. மூவருக்கும்தான் போட்டி. ஒரு தேர்வில் நான் அதிக மதிப்பெண் வாங்கினால் அடுத்தமுறை ராமசாமி, அல்லது அந்த ரத்தினம், இருவரில் ஒருவர் வாங்கிவிடுவார். பள்ளியைப்பற்றி பின்னர். இப்போது நாம் மலைக்குசெல்வோம். ஆற்றைக் கடந்தவுடன் மலை ஆரம்பித்துவிடும். ஆற்றைப்பார்த்தவுடன் சிலருக்கு அங்கு விளையாட வேண்டும் என்று ஆசை வந்துவிடும். அவர்களை சமாளித்து பின்னர் செல்வோம். அங்கு வழியில் குண்டுமணி செடியில் இருந்து கறுப்பும், சிவப்புமான மணிகள் கொட்டிக்கிடக்கும். அவற்றைப் பொறுக்கிக் கொள்வோம். பின்னர் அங்கு கிடைக்கும் பலவிதமான பழங்கள், காய்கள் ஆகியவற்றை பறித்து தின்றுகொண்டே செல்வோம். வெகுதூர நடை, மலையேறுத்ல் ஆகியவைகளினால் பசித்துக்கொண்டே இருக்கும். ஆற்றைக்க் கடக்கும்போது குடித்த் தண்ணீர்தான் .அதன்பிறகு மலையுச்சி சென்றால்தான் த்ண்ணீர் கிடைக்கும். கள்ளி செடிகளில் சப்பாத்திக்கள்ளி (cactus) என்று ஒருவகை. அதன் பூக்களும் மிக அழகாக இருக்கும். அதன் பழம் ரத்த சிவப்பாக இருக்கும். அதன் நடுவே நட்சத்திரம் போன்றவடிவில் முள் ஒன்று இருக்கும். அதை நீக்கிவிட்டு சாப்பிட்டால். அப்படியொரு சுவை, இனிப்பு. நம் கையெல்லாம் ரத்த் நிறமாகிவிடும். கடைசியாக மூன்றவது மலை. அது வெறும் பாறைகளினால் ஆனது, அதன்மீது ஏறுவது மிகவும் கடினம். அதில் மிகவும் முயற்சிசெய்து ஏறுவோம். அதன் உச்சியில்தான் அந்த அதிசிய சுனை உள்ளது. கோடை காலங்களில், கீழே ஊரில் உள்ள கிணறுகளில் நீர் வற்றிவிடும். ஆனால், இந்த சுனையில் நீர்மட்டம் ஒரு நூல் அளவுகூடக் குறையாது.நாங்கள் அதன் அருகே சென்று, சுற்றி அமர்ந்துகொண்டு, எங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமாக அதில் உள்ள நீரை வெளியே கைகளால் அள்ளி அள்ளி ஊற்றுவோம். அந்த நீர் கிழே உள்ள பாறையில் வழிந்தோடும். ஆனால் நீரின் அளவு சிறிதுகூட குறையாது.
அங்கேயே சிறிது நேரம் விளையாடிவிட்டு. தேவையான அளவு
சுனை நீரை பருகிவிட்டு புறப்படுவோம். வரும்போது எங்களின் வயிறும், கால்சட்டை பைகளும் நிரம்பியிருக்கும். வீடுவர மாலை முடிந்து இரவு நெருங்கிவிடும். வீட்டில் ஏதேதொ சொல்லி த்ப்பித்துவிடு வோம்

Saturday, July 10, 2010

தத்துவம்
நானும் ந்ண்பர் ஒருவரும் அன்று காரில் சென்றுகொண்டிருந்தோம். அவர் எனது குடும்ப ந்ண்பர். அவர் என்னிடம் “உனது அம்மா எங்கு இருக்கிறார் “ என்று வினவினார். நானும் “ எனது த்ங்கை வீட்டில் மதுரையில் இருக்கிறார்” என்று கூறினேன்.அவர் மனதுக்குள் சிரித்துக்கொண்டு “நீங்கள் அவருக்கு பணம் அனுப்பிகிறீர்களா” என்றார். “ஆம்” என்று பெருமையாக கூறினேன். அத்ற்கு அவர் “ஒரு கதை கூறுகிறேன், கேளுங்கள்” என்று கதை சொல்ல ஆரம்பித்தார். இந்த மார்வாரிகள்(அதாவது ராஜஸ்தான் மாநிலத்தவர்) தங்களின் தாய்க்கு பணம் அனுப்பமாட்டார்கள், தங்களின் நிலத்திற்கு வேலி போடமாட்டார்கள், கொடுத்த கடனை த்ரும்பகேட்கமாட்டார்கள்” ஏன்? என்று என்னைக்கேட்டார். எனக்கு பதில் தெரியவில்லை. அவரையே சொல்லுங்கள் என்றேன்.

அவர் சொன்னார் ”அவர்கள் தாயை வேறு எவரிடமும் அனுப்பமாட்டார்கள். தங்களுடனே வைத்துக்கொள்வார்கள். அத்னால் அவர்கள் தாய்க்கு பணம் அனுப்பவேண்டியதில்லை, அடுத்த்து அவர்கள் ஊரில் செல்வாக்குடன் இருப்பார்கள். ஊரில் அவர்கள்மேல் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை இருக்கும். அத்னால் அவர்களின் நிலத்தில் யாரும் கைவைக்கமாட்டார்கள். அதனால் அவர்களின் நிலத்திற்கு வேலி போடும் பழ்க்கம் கிடையாது. அவர்கள் யாருக்கும் தாங்கள் கொடுக்கும் பணத்த்ற்கு ஈடான பொருளை பெற்ற்க்கொள்ளாமல் பணம் தரமாட்டார்கள். அத்னால் அவர்கள் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை கேட்கமாட்டார்கள்.” என்று கூறினார்.
எனக்கு செருப்பால் அடிபட்டது போன்று இருந்த்து. அடுத்தவாரமே எனது அம்மாவை அழைத்துவந்து என்னுடன் வைத்துக்கொண்டேன்.
4 ந்தமரத்தை அழகாக கூம்பு வடிவத்தில் வெட்டி எடுத்து பின்னர், எங்கள் ஊர் கொள்ளரிடம் (இரும்பு வேலை செய்பவர்) கொடுத்து அவரிடம் கெஞ்சி, வேறு வேலை இல்லாதபோது மவமிறங்கி அதனை பம்பரமாக ஆக்கித்தருவார். அதுவரை அவர் அருகிலேயே அமர்ந்து சாப்பிடக்கூட வீட்டிற்குக்கூட செல்லாமல் காத்திருப்போம்.முத்லில் ஒரு ஆணியை எடுத்து அந்த பம்பரத்தின் கூர்மையான பகுதியில் அடித்து உள்ளே இறக்கிவிடுவார். பின்னர் மெதுவாகாதை அழ்கு படுத்துவார். அன்று இரவு ச்ங்களுக்கு தூக்கம் கிடையாது. தெருவிளக்கில் சலிக்க சலிக்க விளையாடுவோம். பெரியவர்கள் வந்து அடித்து அழைத்து செல்வார்கள். மறு நாள் அத்ற்கு வண்ணம் பூசும் வேலை நடைபெறும்.
எங்கள் ஊர் குளத்தில் தாமரை அடர்த்தியாக படர்ந்திருக்கும்.அத்ற்கு சுவராலான கரைகள் உண்டு. சுவற்றில் நீர்மட்ட்த்தில் உள்ள ஓட்டைகளில் தண்ணீர் பாம்புகள் நிறைய இருக்கும். அவற்றை பிடிப்பது ஒருகலை. முத்லில் த்வளை வேண்டும். அதை பிடிக்க வயல்வெளிகளில் அலைந்து பிடித்து வருவோம். த்வளையை ஒரு நீளமான கயிற்றில் கட்டி அந்த சுவற்றின்மேல் நடந்துசென்று மெதுவாக கயிற்றை பாம்பு இருக்கும் துளைக்கு நேராக த்வளை பாம்பின் கண்களுக்கு தெரிவதுமாதிரி காட்டுவோம். பாம்பு மெதுவாக த்வளையைப்பிடிக்க வெளியே வரும். உடனே த்வளையை பாம்பின் வாய்க்கு கொடுத்துவிடக்கூடாது. சிறிதுசிறிதாக வெளியே வரவைக்க வேண்டும். பாம்பு முழுவதுமாக வெளியே வந்த்பின்னர் த்வளையை விழுங்கவிடவேண்டும். ந்ன்றாக விழுங்கிய பின்பு மேலே தூக்கினால் பாம்பு இரையை வெளியே துப்பமுடியாமல் கயிற்றுடன் வரும். அருகில் உள்ள நெடுஞ்சாலையில் கொண்டு விட்டால் அத் பயந்து ஓடும். ஆனால் அதனால் தார்சாலையில் வேகமாக ஓட முடியாது. அத்ற்குள் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அதை சட்னி ஆக்கிவிடும். இவ்வாறு ஒருநாளைக்கு 50ல் இருந்து 100 பாம்புவரை கொலைசெய்வோம்


அடுத்து ஓணான் பந்தயம். முத்லில் மாட்டின் வாலில் இருந்து முடியை பிடுங்கவேண்டும். அது ஒன்றும் சாதரண் வேலை இல்லை. எக்குத்ப்பாக மாட்டின் வால் அருகில் சென்று அத்ன்வால்முடியை பிடுங்கினீர்கள் என்றால் அப்புறம் குறைந்த்து நான்கு பல்லாவது காணாமல் போய்விடும். அதற்கு மாட்டின் பின்புறமாக பக்கவாட்டில் நின்றுகொண்டு மாடு தனது வாலை எப்போது அசைக்காமல் நிறுத்துகிறதோ, அப்போது மெதுவாக மாட்டின் வாலில் உள்ள முடிகளில் இரண்டு அல்லது மூன்று முடிகளை மட்டும் சட்டென்று பிடுங்கவேண்டும். பிறகு அவைகளை இரண்டு இரண்டாக அரளி கம்பின் முனையில் இறுக்கமாக்க் கட்டவேண்டும். அந்தமுடியின் மறுமுனையில் சுருக்கு முடிச்சு போடவேண்டும். இனிதான் ஓணான் பிடிக்கவேண்டும்.. இந்த ஓணானுக்கு ஒரு புத்தி உண்டு.அது எப்போதும் தனது த்லையை தூக்கியபடியே செடிகளின் கிளைகளில் இருக்கும். அது ந்மக்கு மிகவும் வசதியான விசயம். அவ்வாறு நிற்கும் ஓணானின் த்லைவழியாக கழுத்தில் இந்த சுருக்கை மாட்டவேண்டும். பிறகு சரக்கென்று இழுக்கவேண்டும். இப்போது ஓணான் நம்கையில். இவ்வாறு ஆளுக்கு ஒரு ஓணான் என்று பிடித்துகொள்வோம்.இத்ற்கு முன்பாக வாய்க்காலில் களிமண் எடுத்து வண்டி செய்யவேண்சடும். வண்டி செய்து ந்ல்லமுறையில் அதனை காயவைத்து, ஒற்றைமாட்டுவண்டி இரட்டைமாட்டுவண்டி என்று த்யாரித்து வைத்திருப்போம். இதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களாவது ஆகும். பந்தயத்தன்று காலை 10மணி அளவில் எல்லோரும் நெடுஞ்சாலையில் கூடுவோம். வண்டிகளில் ஓணான்களை மாடுபோல் கட்டி, மேலும் அவற்றிற்கு கோபமூட்ட மூக்குப்பொடியை அவற்றின் கண்களின்மீது தூவுவோம்.அத்ன்பிற்கு அந்த வண்டிகள் பற்க்கும்போது சக்கரங்க்கள் பிய்த்துக்கொண்டு ஓடுவது கண்கொள்ளாக்காட்சி.

Thursday, July 8, 2010

3
ள்ளி விடுமுறை நாட்கள், எங்களின் கொண்டாட்ட்திற்கு
அளவிடமுடியாத மகிழ்ச்சியை அள்ளி வழங்கியது. வயல்வெளிகல் எல்லாம் காய ஆரம்பித்துவிடும். ஆற்றில் நீர் வரத்து குறைந்துவிடும். கிண்றுகளில் மட்டுமே குளித்து கும்மாளமிடமுடியும். ஆனால்விடுமுறை என்பதால், அள்ளி பிள்ளைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்துசிடுவோம்.இருக்கிற அனத்து விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்வோம். மரக்குரங்கு என்று ஒரு விளையாட்டு. எல்லோரும் ம்ரத்தின் மீது ஏறிக்கொள்ள, ஒருவன் மட்டும் கீழே வட்ட்த்தின் உள்ளே உள்ள குச்சியை மேலெ உள்ள யாரும் எடுத்துவிடாமல் பார்த்துக்கொண்டு, மேலே உள்ள ஒருவரில் யாரையாவது தொடவேண்டும். அப்படி தொட்டுவிட்டால், அவர் கீழே சென்று மற்றவர்களை தொட வேண்டும். ஆனால் மேலே உள்ளவர்கள் கிழே இறங்கி வட்ட்த்தினுள்ளே உள்ள குச்சியை எடுத்து தூரமாக எறிந்துவிடுவார்கள். அப்படி குச்சி வட்ட்த்தினுள் இல்லாதபோது அவர் யாரை தொட்டாலும் செல்லாது. மீண்டும் அவர் ஓடிசென்று அந்த குச்சியை எடுத்து வந்து, வட்ட்த்தினுள் வைத்துவிட்டு, பின்னர்தான் அவர் மரத்தின் மீதுள்ளவர்களை தொடவேண்டும். மேலும் கபடி, கிட்டிபுள் ஆகிய விளையாட்டுகள். கோலி, தீப்பெட்டி படம் வைத்து விளையாடும் விளையாட்டு. ஊரில் முத்தாலம்மன் கோவில் வெளிப்புறத்தில், கல்லில் ப்தினெட்டாம்புலி விளையாடுவோம். அதை எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர், ஊரில் எல்லோரும் அவரை கரடி என்றுதான் அழைப்பார்கள். அப்போது அவர் வயது 70க்கு மேல் இருக்கும். என்னைப்போன்ற சிறு பிள்ளைகளை அழைத்து அந்த விளையாட்டை கற்றுக்கொடுப்பார். பின்னர் எங்களுடனே விளையாடுவார். அதி 18 ஆடுகளும், 1 புலியும் இருக்கும். அது ஒரு ந்ல்ல விளையாட்டு. பம்பரம்: இதுவும் நாங்கள் விரும்பி விளையாடும் .அப்போதெல்லாம் கடையில் பம்பரம் கிடைக்காது. நாங்களே தயாரிப்போம். அதற்கு ஒருநாள் ஆகும். முத்ல்நாளே எல்லோரும்முடிவுசெய்துவிடுவோம். மறுநாள் காலையில் வெட்டுக்கதி எடுத்துக்கொண்டு ந்ல்ல “மஞ்சந்த்தி” மரம் தேடிச்செல்வோம் அதையும் ஏற்கனவே பர்த்துவைத்திருப்போம். அத்ல் பம்பரம் செய்ய பொருத்தமான கிளையை வெட்டி எடுத்து வருவோம்.

Tuesday, July 6, 2010

கிராம்ம் எப்படி இருக்கும் எதுவும் என்க்குத்தெரியாது. அம்மா கடையை விற்றுவிட்டு மற்ற் பொருட்களை பண்மாக மாற்றிக்கொண்டு சில மாத்ங்கள் கழித்து அண்ணன் ம்ற்றும் அப்பாவுடன் வந்துசேர்ந்தாகள். அங்கு இருந்த ஆரம்ப்பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார்கள். அண்ண்னை வாடிப்பட்டியில் உள்ள உயர்நிலைபள்ளியில் சேர்ந்தார். நானும் அண்ணனும் ஓரள்விற்கு படிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்துடன் ஒன்ற ஆரம்பித்தோம். வடுகபட்டி, அது கிராம்மல்ல சொர்கம். அங்கு பச்சைபசேல் என்ற் வயல்கள். முல்லை பெரியார் வாய்க்கால். அத்ன்பின் மலைகள் என அனைத்து அழகுகளுடன் அமைந்த கிராமம். பள்ளி சென்ற நேரம் த்விர மற்ற நேரங்களில் விளையாட்டில் கழித்தோம். முத்லில் நீச்ச்சல். தற்போது உள்ளதுபோல் நீச்சல் கற்றுக்கொள்ள பள்ளிகள் கிடையாது. ஏற்கனவெ நீச்சல் தெரிந்த பையன்களோடு நானும் சென்றேன். அவர்கள் ஒரு கிணற்றுக்கு சென்றார்கள். அது ஆழமாகவும் மிகப் பெரியதாகவும் இருந்தது.அவர்கள் அனைவரும் தங்களின் உடைகளை, அதாவது கால்சட்டை மற்றும் மேல்சட்டை அவ்வளவுதான்,களைந்துவிட்டு அம்மணமாக மேலிருந்து குதித்து கிண்ற்றில் நீந்தினார்கள். நான் நீச்சல் தெரியாத காரணத்தால் கிண்ற்றின் கரையில் அமர்ந்துகொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அன்று நீச்சல் கற்று கொடுத்து விடவேண்டும் என்று முடிவுசெய்திருந்த செய்தி எனக்குத்தெரியாது. ஒருவன் வந்து என்னை கிணற்றின் அருகில் வருமாறு அழைத்தான். அவர்களின் த்ந்திரம் தெரியாமல் நானும் அங்கு சென்றேன். அவன் என்னிடம் ‘கிணற்றின் உள்ளேபார்.தரை தெரிகிறதா?’ என்றான். நானும் அவன் சொன்னதை ந்ம்பி, மெதுவாக எட்டிப்பார்த்தேன். அடுத்த நிமிடம் நான் கிணற்றின் உள்ளெ இருந்தேன். அவன் என்னை கிணற்றின் உள்ளெ த்ள்ளிவிட்டுவிட்டான். நான் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உள்ளெ இருந்த மற்றவர்கள் என்னை தூக்கி எவ்வாறு நீச்சல் அடிப்பது என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவ்வாறுதான் அவர்கள் நீச்சல் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். பின்னர் நானும் பல நண்பர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன்.

Monday, July 5, 2010

வலியது வெல்லும் 1 ல்லோரும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவார்கள். ஆனால் நாங்கள் நகரத்திலிருந்து கிராமத்திற்கு குடிபெயர்ந்தோம். இது ந்டந்த்து 1940களில், சுத்ந்திரத்திற்கு முன்பு. அப்போது மவுண்ரோடில் (தற்போதய அண்ணா சாலை) பழைய விலிங்டன் திரை அரங்கம் அருகே எம்.எஸ்.ஸ்டோர்என்று ஒரு கடை இருந்த்து. கடை என்றால் நீங்கள் நினைப்பது போன்று சாதரண பொட்டிக்கடைஅல்ல.அனைத்தும் ஒரே இட்த்தில் வாங்க்கூடிய கடை. அக்காலத்தில் மது அருந்துபவர்கள் மருத்துவரிடம் “இவர் கட்டாயம் மது அருந்த்வேண்டும்” என்று சான்று பெற்று,அதனை அரசு அலுவலகத்தில் சமர்ப்பித்து, பின்னர்தான் மதுவை கடைகளில் பெறமுடியும். அதுபோன்று மது வாங்குபவர்களுக்கென்று தனியாக மதுக்கடையும் அதிலிருந்தது. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த்க்கடையின் முழு பொறுப்பும் பார்த்துக்கொண்டது எங்களின் தகப்பனார். பிறகு ஏதொ காரணத்திற்காக அங்கிருந்து அவர் விலகி, த்ற்போது எல்டாம்ஸ் சாலையில் உட்புறம் திருவள்ளுவர் சாலை என்று ஒரு தெரு இபோதும் உள்ளது. அந்த்தெருவில் ஒரு ரொட்டிக்கடை(பேக்கரி)ஆரம்பித்தார். அது ந்ன்றாகவெ ந்டந்தது. ஆனால் விதி வெறுவிதமாக இருந்த்து. எங்கள் த்ந்தைக்கு டி.பி என்கிற நோய் தாக்கியது, எங்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. எங்களின் தாயார்; கடையையும்,எங்களையும்,தந்தைய்யும் கவனித்துக்கொள்வது என்பது முடியாத சூழ்நிலையில், வேறு வழியில்லாமல் குடும்பத்தை அம்மவின் ஊரில் பாட்டியிடம் அனுப்பிவிடுவது ந்ன்று முடிவு செய்து, முதலில் என்னையும் அக்காவையும் முத்லில் அனுப்பினார்கள்.அது (வடுகபட்டி மதுரையில் இருந்து 15வது மைலில் உள்ளது) வைகை அணை அருகே ஒரு வடுகபட்டி உள்ளது. அது வேறு. அதனால் எங்களின் ஊர் T. வடுகபட்டி என்று அழைக்கப்படுகிறது. அங்கே எங்களின் பாட்டி சற்று வசதியாக நிலபுலங்கலோடு இருந்தார். என்னையும் அக்காவையும் முதலில் அனுப்பியதற்கு வேறு ஒரு காரண்மும் இருந்த்து. அக்காலத்தில் நாங்கள் குடி இருந்த பகுதிகளில் யானைக்கால் நோய் அதிகமாக இருந்த்து. வயதுவந்த பெண்ணுக்கு அந்நோய் வந்துவிட்டால் பின்னர் யார் திருமணம் செய்து கொள்வார்கள். எனவேதான் எங்கள் இருவரையும் முதலில் அனுப்பினார்கள்
அப்போது எனக்கு வயது ஜந்து.