4 அந்தமரத்தை அழகாக கூம்பு வடிவத்தில் வெட்டி எடுத்து பின்னர், எங்கள் ஊர் கொள்ளரிடம் (இரும்பு வேலை செய்பவர்) கொடுத்து அவரிடம் கெஞ்சி, வேறு வேலை இல்லாதபோது மவமிறங்கி அதனை பம்பரமாக ஆக்கித்தருவார். அதுவரை அவர் அருகிலேயே அமர்ந்து சாப்பிடக்கூட வீட்டிற்குக்கூட செல்லாமல் காத்திருப்போம்.முத்லில் ஒரு ஆணியை எடுத்து அந்த பம்பரத்தின் கூர்மையான பகுதியில் அடித்து உள்ளே இறக்கிவிடுவார். பின்னர் மெதுவாகாதை அழ்கு படுத்துவார். அன்று இரவு ச்ங்களுக்கு தூக்கம் கிடையாது. தெருவிளக்கில் சலிக்க சலிக்க விளையாடுவோம். பெரியவர்கள் வந்து அடித்து அழைத்து செல்வார்கள். மறு நாள் அத்ற்கு வண்ணம் பூசும் வேலை நடைபெறும்.
எங்கள் ஊர் குளத்தில் தாமரை அடர்த்தியாக படர்ந்திருக்கும்.அத்ற்கு சுவராலான கரைகள் உண்டு. சுவற்றில் நீர்மட்ட்த்தில் உள்ள ஓட்டைகளில் தண்ணீர் பாம்புகள் நிறைய இருக்கும். அவற்றை பிடிப்பது ஒருகலை. முத்லில் த்வளை வேண்டும். அதை பிடிக்க வயல்வெளிகளில் அலைந்து பிடித்து வருவோம். த்வளையை ஒரு நீளமான கயிற்றில் கட்டி அந்த சுவற்றின்மேல் நடந்துசென்று மெதுவாக கயிற்றை பாம்பு இருக்கும் துளைக்கு நேராக த்வளை பாம்பின் கண்களுக்கு தெரிவதுமாதிரி காட்டுவோம். பாம்பு மெதுவாக த்வளையைப்பிடிக்க வெளியே வரும். உடனே த்வளையை பாம்பின் வாய்க்கு கொடுத்துவிடக்கூடாது. சிறிதுசிறிதாக வெளியே வரவைக்க வேண்டும். பாம்பு முழுவதுமாக வெளியே வந்த்பின்னர் த்வளையை விழுங்கவிடவேண்டும். ந்ன்றாக விழுங்கிய பின்பு மேலே தூக்கினால் பாம்பு இரையை வெளியே துப்பமுடியாமல் கயிற்றுடன் வரும். அருகில் உள்ள நெடுஞ்சாலையில் கொண்டு விட்டால் அத் பயந்து ஓடும். ஆனால் அதனால் தார்சாலையில் வேகமாக ஓட முடியாது. அத்ற்குள் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அதை சட்னி ஆக்கிவிடும். இவ்வாறு ஒருநாளைக்கு 50ல் இருந்து 100 பாம்புவரை கொலைசெய்வோம்
அடுத்து ஓணான் பந்தயம். முத்லில் மாட்டின் வாலில் இருந்து முடியை பிடுங்கவேண்டும். அது ஒன்றும் சாதரண் வேலை இல்லை. எக்குத்ப்பாக மாட்டின் வால் அருகில் சென்று அத்ன்வால்முடியை பிடுங்கினீர்கள் என்றால் அப்புறம் குறைந்த்து நான்கு பல்லாவது காணாமல் போய்விடும். அதற்கு மாட்டின் பின்புறமாக பக்கவாட்டில் நின்றுகொண்டு மாடு தனது வாலை எப்போது அசைக்காமல் நிறுத்துகிறதோ, அப்போது மெதுவாக மாட்டின் வாலில் உள்ள முடிகளில் இரண்டு அல்லது மூன்று முடிகளை மட்டும் சட்டென்று பிடுங்கவேண்டும். பிறகு அவைகளை இரண்டு இரண்டாக அரளி கம்பின் முனையில் இறுக்கமாக்க் கட்டவேண்டும். அந்தமுடியின் மறுமுனையில் சுருக்கு முடிச்சு போடவேண்டும். இனிதான் ஓணான் பிடிக்கவேண்டும்.. இந்த ஓணானுக்கு ஒரு புத்தி உண்டு.அது எப்போதும் தனது த்லையை தூக்கியபடியே செடிகளின் கிளைகளில் இருக்கும். அது ந்மக்கு மிகவும் வசதியான விசயம். அவ்வாறு நிற்கும் ஓணானின் த்லைவழியாக கழுத்தில் இந்த சுருக்கை மாட்டவேண்டும். பிறகு சரக்கென்று இழுக்கவேண்டும். இப்போது ஓணான் நம்கையில். இவ்வாறு ஆளுக்கு ஒரு ஓணான் என்று பிடித்துகொள்வோம்.இத்ற்கு முன்பாக வாய்க்காலில் களிமண் எடுத்து வண்டி செய்யவேண்சடும். வண்டி செய்து ந்ல்லமுறையில் அதனை காயவைத்து, ஒற்றைமாட்டுவண்டி இரட்டைமாட்டுவண்டி என்று த்யாரித்து வைத்திருப்போம். இதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களாவது ஆகும். பந்தயத்தன்று காலை 10மணி அளவில் எல்லோரும் நெடுஞ்சாலையில் கூடுவோம். வண்டிகளில் ஓணான்களை மாடுபோல் கட்டி, மேலும் அவற்றிற்கு கோபமூட்ட மூக்குப்பொடியை அவற்றின் கண்களின்மீது தூவுவோம்.அத்ன்பிற்கு அந்த வண்டிகள் பற்க்கும்போது சக்கரங்க்கள் பிய்த்துக்கொண்டு ஓடுவது கண்கொள்ளாக்காட்சி.
No comments:
Post a Comment