தத்துவம்
நானும் ந்ண்பர் ஒருவரும் அன்று காரில் சென்றுகொண்டிருந்தோம். அவர் எனது குடும்ப ந்ண்பர். அவர் என்னிடம் “உனது அம்மா எங்கு இருக்கிறார் “ என்று வினவினார். நானும் “ எனது த்ங்கை வீட்டில் மதுரையில் இருக்கிறார்” என்று கூறினேன்.அவர் மனதுக்குள் சிரித்துக்கொண்டு “நீங்கள் அவருக்கு பணம் அனுப்பிகிறீர்களா” என்றார். “ஆம்” என்று பெருமையாக கூறினேன். அத்ற்கு அவர் “ஒரு கதை கூறுகிறேன், கேளுங்கள்” என்று கதை சொல்ல ஆரம்பித்தார். இந்த மார்வாரிகள்(அதாவது ராஜஸ்தான் மாநிலத்தவர்) தங்களின் தாய்க்கு பணம் அனுப்பமாட்டார்கள், தங்களின் நிலத்திற்கு வேலி போடமாட்டார்கள், கொடுத்த கடனை த்ரும்பகேட்கமாட்டார்கள்” ஏன்? என்று என்னைக்கேட்டார். எனக்கு பதில் தெரியவில்லை. அவரையே சொல்லுங்கள் என்றேன்.
அவர் சொன்னார் ”அவர்கள் தாயை வேறு எவரிடமும் அனுப்பமாட்டார்கள். தங்களுடனே வைத்துக்கொள்வார்கள். அத்னால் அவர்கள் தாய்க்கு பணம் அனுப்பவேண்டியதில்லை, அடுத்த்து அவர்கள் ஊரில் செல்வாக்குடன் இருப்பார்கள். ஊரில் அவர்கள்மேல் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை இருக்கும். அத்னால் அவர்களின் நிலத்தில் யாரும் கைவைக்கமாட்டார்கள். அதனால் அவர்களின் நிலத்திற்கு வேலி போடும் பழ்க்கம் கிடையாது. அவர்கள் யாருக்கும் தாங்கள் கொடுக்கும் பணத்த்ற்கு ஈடான பொருளை பெற்ற்க்கொள்ளாமல் பணம் தரமாட்டார்கள். அத்னால் அவர்கள் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை கேட்கமாட்டார்கள்.” என்று கூறினார்.
எனக்கு செருப்பால் அடிபட்டது போன்று இருந்த்து. அடுத்தவாரமே எனது அம்மாவை அழைத்துவந்து என்னுடன் வைத்துக்கொண்டேன்.
No comments:
Post a Comment