3
பள்ளி விடுமுறை நாட்கள், எங்களின் கொண்டாட்ட்திற்கு
அளவிடமுடியாத மகிழ்ச்சியை அள்ளி வழங்கியது. வயல்வெளிகல் எல்லாம் காய ஆரம்பித்துவிடும். ஆற்றில் நீர் வரத்து குறைந்துவிடும். கிண்றுகளில் மட்டுமே குளித்து கும்மாளமிடமுடியும். ஆனால்விடுமுறை என்பதால், அள்ளி பிள்ளைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்துசிடுவோம்.இருக்கிற அனத்து விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்வோம். மரக்குரங்கு என்று ஒரு விளையாட்டு. எல்லோரும் ம்ரத்தின் மீது ஏறிக்கொள்ள, ஒருவன் மட்டும் கீழே வட்ட்த்தின் உள்ளே உள்ள குச்சியை மேலெ உள்ள யாரும் எடுத்துவிடாமல் பார்த்துக்கொண்டு, மேலே உள்ள ஒருவரில் யாரையாவது தொடவேண்டும். அப்படி தொட்டுவிட்டால், அவர் கீழே சென்று மற்றவர்களை தொட வேண்டும். ஆனால் மேலே உள்ளவர்கள் கிழே இறங்கி வட்ட்த்தினுள்ளே உள்ள குச்சியை எடுத்து தூரமாக எறிந்துவிடுவார்கள். அப்படி குச்சி வட்ட்த்தினுள் இல்லாதபோது அவர் யாரை தொட்டாலும் செல்லாது. மீண்டும் அவர் ஓடிசென்று அந்த குச்சியை எடுத்து வந்து, வட்ட்த்தினுள் வைத்துவிட்டு, பின்னர்தான் அவர் மரத்தின் மீதுள்ளவர்களை தொடவேண்டும். மேலும் கபடி, கிட்டிபுள் ஆகிய விளையாட்டுகள். கோலி, தீப்பெட்டி படம் வைத்து விளையாடும் விளையாட்டு. ஊரில் முத்தாலம்மன் கோவில் வெளிப்புறத்தில், கல்லில் ப்தினெட்டாம்புலி விளையாடுவோம். அதை எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர், ஊரில் எல்லோரும் அவரை கரடி என்றுதான் அழைப்பார்கள். அப்போது அவர் வயது 70க்கு மேல் இருக்கும். என்னைப்போன்ற சிறு பிள்ளைகளை அழைத்து அந்த விளையாட்டை கற்றுக்கொடுப்பார். பின்னர் எங்களுடனே விளையாடுவார். அதி 18 ஆடுகளும், 1 புலியும் இருக்கும். அது ஒரு ந்ல்ல விளையாட்டு. பம்பரம்: இதுவும் நாங்கள் விரும்பி விளையாடும் .அப்போதெல்லாம் கடையில் பம்பரம் கிடைக்காது. நாங்களே தயாரிப்போம். அதற்கு ஒருநாள் ஆகும். முத்ல்நாளே எல்லோரும்முடிவுசெய்துவிடுவோம். மறுநாள் காலையில் வெட்டுக்கதி எடுத்துக்கொண்டு ந்ல்ல “மஞ்சந்த்தி” மரம் தேடிச்செல்வோம் அதையும் ஏற்கனவே பர்த்துவைத்திருப்போம். அத்ல் பம்பரம் செய்ய பொருத்தமான கிளையை வெட்டி எடுத்து வருவோம்.
No comments:
Post a Comment