Thursday, September 30, 2010
11
வலியது வெல்லும்
அன்று என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான ஒரு நாள். L.I.C. வேலை என்றால் சும்மாவா? அனுமதி கடிதத்தை எடுத்துக்கொண்டு அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு என்னைப்போல் பலர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சற்று பருமனாகவும், கண்ணாடி அணிந்துகொண்டும் தனியாக நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன், அவரிடம் பேசவேண்டும்போல் ஒரு ஆவல் ஏற்பட்டது. அவர் அருகில் சென்று மெதுவாக் “சார், நீங்களும் இங்கு வேலைக்கு வந்திருக்கிறீர்களா?” என்றேன். அவர் ஆமாம் என்றார். பிறகு அவர் வீடு பார்த்தசாரதி கோயில் பக்கம் என்று தெரிந்துகொண்டேன். நான் இருப்பது லாயிட்ஸ் சாலையில். இரண்டும் பக்கம்தான். ஆனால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. லாயிட்ஸ் சாலை மீனவர்களும், இஸ்லாமியர்களும், ஏழ்மையில் உள்ளவர்களும் வாழும் பகுதி. பார்த்தசாரதி கோயில் பக்கம் என்றால், பிராமனர்களும், வசதி படைத்தோரும் வாழும் பகுதி. ஆனால் இரண்டும் திருவல்லிக்கேணிதான். இரண்டுக்கும் பின்கோட் 600005 தான். சங்கராச்சாரியார் வந்தால் அயிஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் என்ற இடத்தில் தங்குவார். எல்லோரும் அவரைப்பார்கக்ச் செல்வார்கள். அவர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளவர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த்ப்பக்கம் உள்ள மீனவர்கள் மற்றும் உள்ள ஏழைகள் அவரை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அவரைப்பற்றி ஏதும் தெரியாது. அவரும் அவஎகளை கண்டுகொள்ளமாட்டார். ஏனென்றால் அவர்கள் சூத்திரர்கள். இரு பகுதிகளும் ஒரே தொகுதி, ஒரே பின்கோட், ஒரே வார்டு, ஆனால் இன்றைக்கும் சென்று பாருங்கள்,வித்தியாசம் தனியாகத்தெரியும்.
இருவரும் நண்பர்களானோம். அவர் பிராமனர், நான் வேறு சாதி. அவர் இருப்பது நகரத்தின் மிக பிரசித்தமான பகுதி. நான் இருப்பது மீனவர் குப்பம். அதையேல்லம் மீறி எங்களின் நட்பு வளர்ந்தது. இருவரும் எல்.ஜ. சி யில் சேர்ந்து பணிபுரிந்தோம்.
நாள்தோறும் இருவரும் வீட்டில் இருந்து நடந்தே அலுவலகம் செல்ல்வோம். பேருந்துக் கட்டணம் 10 பைசாதான். ஆனால் பேசிக்கொண்டே நடந்து செல்வதில் உள்ள மகிழ்ச்சி அதில் கிடைக்காத்ல்லவா/ அதற்காகத்தான். அலுவலகம் முடிந்தவுடன் மாலையில் தினமும் கடற்கரை சென்று மாலைப்பொழுதை இனிமையாககழித்து மகிழ்வோம்.. பின்னர் ஒரு சமயம் இருவரும் தபால் அலுவலகத்திற்கு வேலைக்கு மனு செய்தோம். அன்று மனு சமர்ப்பிக்க கடைசிநாள். நான் நேராக அண்ணாசாலை அஞசல்அகத்திற்கு சென்று மனுவை சமர்ப்பித்துவிட்டு பின்னர் அலவலகம் சென்றேன். அவர் (பெயர் இராம சுப்ரமணியன்) அலுவலகம் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, அனுமதிவாங்கிக்கொண்டு அஞ்சல்கம் சென்று மனுவை சமர்ப்பித்தார். அதில்தான் என் வாழ்க்கை த்டம் புரண்டது. அவசச்ரத்தில் நான் மனுவை பூர்த்திசெய்து கையொப்பமிடாமல் சமர்ப்பித்துவிட்டேன். எனவே நண்பருக்கு அந்தவேலை கிடைத்தது. எனது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் எங்களின் நட்பு மாறவில்லை.
ஒரு காட்டில் யானை ஒன்று குளத்தில் குளித்துக்கொண்டிருந்தது. அப்பொது ஒரு எலி குளக்கரையில் வந்து நின்று யானையைப் பார்த்து அதிகாரமாக “மேலே வா” என்றது. யானை சிறிது நேரம் யோசித்துவிட்டு, சரி போகிறான், என்னவென்றுதான் பார்ப்போமே என்று நினத்து, மெதுவாக எழுந்து கரைக்கு வந்து “என்ன விசயம்” என்று அதட்டலாக கேட்டது. ஆனால் அந்த எலி ஏதும் கூறாமல், யானையை சுற்றி சுற்றி வந்து பார்த்தது. பிறகு “சரி நீ போய் குளி” என்றது. யானைக்கு பயங்கர கோபம். ”என்ன நீ பாட்டுக்கு வந்தாய், மேலேவா என்றாய், பிறகு போ என்கிறாய், என்ன வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டாயா?” என்றது. அத்ற்கு அந்த எலி அசராமல், ”நான் ஒன்றும் உன்னை சும்மா தொந்தரவு செய்யவில்லை, நேற்று எனது ஜட்டியை காயப்போட்டிருந்தேன்,
அதைக் காணவில்லை, நீ எடுத்து போட்டுக்கொண்டாயோ என்று பார்த்தேன்” என்றது.
Monday, September 27, 2010
commenwealthgames
எனக்கு ஒன்று புரியவில்லை, நமது நாடு சுதந்திரநாடா? அடிமை நாடா?. இன்னும் எதற்கு ஆங்கிலேயர்களின் அடிவருடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குபிறகும் நம்முடைய அடிமைத்தனத்தை விடமுடியவில்லை. நம் நாட்டின் ஒரு மாநிலத்தின் அளவுகூட இல்லாத நட்டிற்கு, நாம் எதற்காக இன்னும் விட்டுக்கொடுக்கவேண்டும். உடனடியாக நாம் இந்த காமன் வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறவேண்டும். இல்லையென்றால் நாம் இன்னும் அவர்களுக்கு அடிமைகள்தான் என்பது உறுதியாகிறது. இது நம் நாட்டின் நூறு கோடி மக்களுக்கும் அவமானமாகும். இந்த விளையாட்டை சார்லஸ்தான் ஆரம்பித்துவைக்கவேண்டும் என்றால் அதைவிட மீண்டும் நம் நாட்டை ஆளும் உரிமையை அவர்களிடமே கொடுத்துவிடலாம்.அவர்கள் என்ன நாம் கேட்டவுடன் நாட்டை நம்மிடம் கொடுத்துவிட்டார்களா?. எத்தனை உயிர்பலி எவ்வளவு போராட்டம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த எனக்கே இவ்வளவு ரத்தம் கொதிக்கிறது என்றால், நம் தலைவர்கள் இருந்தால் அவர்களின் மனம் எவ்வளவு கொதிக்கும்? ஆயிரம் குறைகள் நம்மிடம் இருக்கலாம் ஆனால் அதைவத்து அடுத்தவர் விளையாட இடம் கொடுக்கக்கூடாது. உடனடியாக நாம் காமன்வெல்த் அமப்பில் இருந்து வெளியேறவேண்டும். அது ஒன்றுதான் நம் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு செய்யும் மிகச்சிறந்த மரியாதையாகும்!
Sunday, September 19, 2010
ஒருமுறை ஏதோ விசயமாக மதுரையில், அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன். காலை ஏழு மணி இருக்கும், காபியையும், பேப்பரையும் ஒருசேர ரசித்து விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வந்தார். அக்காவை மாமி என்று அழைத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் பேச்சு முடிந்ததும் அக்கா என்னிடம், “இவர் நமது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டு பையன், இப்போ மெட்ராசில் (சென்னை) சட்டம் படிக்கிறார்.” நானும் அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். இருவரும் விலாசங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்து பெயர் சுல்தான் அலாவுதீன் என்று தெரிந்துகொண்டேன். மாமா வீட்டில் இருந்தால், அப்பொதெல்லாம் பயம். அளவுக்கு அதிகமாக பேசமாட்டோம். ஏதோ ரிங்மாஸ்டரைப் பார்த்த விலங்குகள்போல் அமைதியாக இருப்போம். அவ்வளவு மரியாதை. அவர் அப்போது தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக(revenue inspector) இருந்தார். பின்னர் தாசில்தாராக ஓய்வு பெற்றார். நான் சின்னப் பையன் என்பதால், பையை கொடுத்து ஆட்டுகறி மற்றும் காய்கறிகளை என்னத்தான் வாங்கிவரச்சொல்வார்கள். மாமாவுக்கு ஒரு தங்கை. என்னைவிட வயதில் மூத்தவர். கல்லூரி முடித்து வீட்டில் இருந்தார். படிப்பே இல்லாத ஒருவரை காதல் திருமணம் செய்து, மூன்றாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டார். அதை முடித்து நான் சென்னை திரும்பினேன்.
Tuesday, September 14, 2010
நான் அப்போது எந்த வேலையிலும் இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் பத்திரிக்கை உலகம் என்னை அழைத்தது. முதன்முதலில் “மினி ஸ்டார்” என்று ஒரு திரைப்பட பத்திரிக்கையில் பணி புரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் ஆசிரியர் மற்றும் முத்லாளி திரு “ஜாசன்” என்பவர். அவர் அப்போது சென்னை ஆவனக்காப்பகத்தில் பணி புரிந்தார். அவர் துணைவியார் வேறு ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிந்தார். திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் அவர்களின் வீடு.. அதிலேயே அலுவலகம்.. அவர் காலையில் நான் செய்யவேண்டிய வேலைகளை என்னிடம் சொல்லிவிட்டு அலுவலகம் செல்வார். நான் பத்திரிக்கைக்கு வேண்டிய விசயங்களை சேகரித்து, அவற்றை ஒருங்கிணைத்து அச்சகம் கொண்டு செல்லவேண்டும்.இப்போதுபோல் இல்லை,மொத்த செய்திகளையும் சேகரித்துக்கொண்டு, தேவையான படங்கள் மற்றும் தலைப்புகளை முதலில் ஒரு ஓவியரிடம் கொடுத்து நமது கற்பனைக்கு ஏற்றவாறு டிசைன் செய்து, அதனை அவர் வரைந்துகொண்டு வந்தபிறகு, அவற்றை ”பிளாக்மேக்கர்” இடம் கொடுத்து அவற்றை பிளாக் செய்து,எல்லாவற்றையும் அச்சகத்தில் தலைமை அச்சுகோர்ப்பாளரிடம் சேர்த்துவிட்டு, மேலும் தேவையான அதிகப்படியான விசயங்களையும் எடுத்துக்கொண்டு அச்சகம் செல்லவேண்டும்.. அங்கு அவர்கள் அச்சுகோர்த்த பக்கங்களை கை அச்சில் பதிந்து தருவார்கள். அந்த பக்கங்களை பிழை திருத்தி மீண்டும் மீண்டும் சரிபார்த்து, அன்று அச்சுகோர்த்த பக்கங்களை எடுத்துக்கொண்டு இரவு எந்நேரமானாலும் ஆசிரியரிடம் சென்று அவற்றை கொடுத்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்லவேண்டும். அப்போதுதான் அவர் அந்த பக்கங்களை சரிபார்த்து, மறுநாள் காலை என்னிடம் கொடுத்து அவற்றை அச்சில் ஏற்ற அனுமதிப்பார். அவற்றை நான் அச்சகத்தில் கொடுத்து அச்சில் ஏற்ற சொல்லவேண்டும். பின்னர் மீண்டும் அடுத்தடுத்த பக்கங்களை அவ்வாறே செய்யவேண்டும். இதற்கிடையில், நாம் கொண்டுவந்த செய்திகள் பக்கங்களை நிரப்ப போதவில்லையென்றால் நாமாகவோ அல்லது அங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து செய்திகளை மொழிபெயர்த்தோ நிரப்பவேண்டும். சிவகாசியில் இருந்து அட்டை வண்ணத்தில் அச்சடித்து தயாராக வந்துவிடும். அதையும் அச்சகத்தில் கொடுத்துவிட்டால், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புத்தகமாக கொடுத்துவிடுவார்கள். அது ஒரு மாத பத்திரிக்கை , மாதத்திற்கு 10,000 முத்ல் 15,000 வரை அச்சடிப்போம். மேலும் அந்த பிரதிகளை அலுவலகம் கொண்டுவந்து இரயில் மற்றும் தபால் மூலம் அனுப்ப, பண்டல்களாக கட்டியெடுத்து இரயில், தபால் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை அனுப்பிவிட்டு வந்து அலுவலகத்தில் அமர்ந்தவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அத்ற்கு ஈடு இணையே இல்லை. எனக்கு அப்போது சம்பளம் வாரம் 50 ரூபாய். அச்சகத்தில் வேளை முடிந்தவுடன் மாதாமாதம் 50 ரூபாய் கொடுப்பார்கள். ஒரு அடையாள அட்டை பத்திரிக்கையாளர் சங்கத்தில் கொடுப்பார்கள். அதன்மூலம் நாம் புதிய படங்களின் “பிரிவியு” மற்றும் நடிகர்கள், திரைப்பட பிரபலங்களை பேட்டி எடுப்பது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய படங்கள் வந்தால், அவற்றைப்பார்த்து நாம்தான் விமரிசனம் எழுதவேண்டும். அக்காலத்தில், கமலஹாசன், ஜெய சித்ரா, ஜெயசுதா, போன்றவர்களை பேட்டி எடுத்துள்ளேன். இதனால் இன்னொரு பலன் கிடைத்தது. அது பல இலக்கியங்களை படிக்க நல்ல திரைப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் ஆகியன.
Wednesday, September 8, 2010
லஸ்கார்னர்! சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்று. அக்காலத்தில் நாங்கள் காலை 7 ம்ணிக்கே லாட்டரி வியாபாரத்தை ஆரம்பித்துவிடுவோம். மக்கள் வரிசையில் நின்று வாங்குவார்கள். ஏனென்றால் எல்லோருக்கும் லட்சாதிபதி ஆகவேண்டும் என்கிற அவா!. காலை 10 மணிக்குள் மூவரும் சேர்ந்து ரூ.300 முதல் ரூ.400 வரை வியாபாரம் செய்துவிடுவோம். அண்ணன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, திருவல்லிக்கேணியில் உள்ள மொத்த வியாபாரியிடம் சென்று சீட்டுகளை வாங்கிவருவார். மாலை வியாபாரியிடம் கணக்கை ஒப்படைத்தபின்பு மீதமுள்ள தொகையை நங்கள் மூவரும் பங்கிட்டுக்கொள்வோம். ( இது தவறு என்று அப்போது தெரியவில்லை)ஒரு பங்கை நண்பருக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள இரண்டு பங்கை அண்ணன் வீட்டிற்கு கொண்டுவருவார். பின்னர் அண்ணன் துறைமுகத்தில் பணிபுரிபவர்களின் உத்வியோடு அங்கு தற்காலிக பணியில் சேர்ந்தார். அங்கு கப்பல்கள் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட்டுவிடும். அங்கிருந்து சிறிய படகுகளின் உதவியோடு துறைமுகத்தின் உள்ளே இழுத்து வருவார்கள். அந்த சிறிய படகில்தான் அண்ணனுக்கு வேலை. அதில் உள்ள கனமான கயிறுகளை பயன்படுத்துவதால், பழக்கமில்லாத கைகளில் வரிவரியாக இரத்த காயங்கள். அதைப்பார்த்து அம்மா கோழியிறகால் எண்ணை த்டவிக்கொண்டே கண்ணீர் விடுவார்கள். அதைப்பார்த்து நாங்களும் கண் கலங்குவோம். இந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு ”முசிறிபுத்தன்” அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பா அவருடைய பேட்டரி பிரிவில் பணிபுரியும் 20 பேர்களை வேலை வாங்கும் மேலாளராக சேர்ந்தார். அங்கு பழைய கார், லாரி பேட்டரிகளை விலைக்கு வாங்கி அதை பிரித்து அதிலுள்ள ஈயத்தை பிரித்தெடுத்து, EXIDE, AMCO போன்ற நிறுவனங்களுக்கு விற்பது மற்றும், மின் கலன்களுக்கான NEGATIVE, POSSITIVE பிளேட்டுகளை தயாரித்து அனுப்புவது ஆகிய வேலைகள் நடந்துவந்தன. ஆனால் அங்கு பணிபுரிந்ததன் காரணமாக, அவர் அங்கிருந்த இரசாயனங்களை சுவாசித்து விரைவில் உடல்நலமிழந்தார். அதற்கு முன்பாகவே முசிறிபுத்தன் அவர்களிடம் அண்ணனைப்பற்றி சொல்லி வைத்துள்ளார். அந்த் நேரத்தில் அவருக்கும், தான் நடத்திக்கொண்டிருந்த “அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற” த்திற்கு அலுவலகத்தை பார்த்துக்கொள்ள நல்ல ஒரு ஆள் தேவைப்பட்டுள்ளது. உடனே அண்ணனை வரச்சொல்லி, அவரின் கையெழுத்து எவ்வாறு உள்ளது என்று பார்த்து, உடனே மன்றத்தின் அலுவலக பொறுப்பாளராக நியமித்துவிட்டார்.
அது முதல் வாழ்க்கையில் கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது.
Sunday, September 5, 2010
7
ஒருவாறாக நானும் அப்பாவும் லாரியைப் பிடித்து சென்னைக்கு ’68 ஆக்ஸ்ட் 15 அன்று வந்து சேர்ந்தோம். கோடம்பாக்கத்தில், அப்பாவின் நண்பரின் வீட்டில் (ஒரு அறை, ஒரு அடுப்படி) தங்கினோம். அன்று மாலை அன்றைய முதல்வர் அண்ணா அவர்கள் பேசிய கூட்டத்திற்கு அப்பா அழைத்து சென்றார். இரண்டு நாட்கள் என்னை விட்டுவிட்டு அப்பா மட்டும் வெளியில் சென்றுவந்தார். மூன்றாம் நாள் என்னை அழைத்துக்கொண்டு மவுண்ட் ரோட் (த்ற்போதய அண்ணா சாலை) அகூர்சந் கட்டிடத்தில் (காயிதேமில்லத் கல்லூரி எதிரில் உள்ள சிவப்பு கட்டிடம்) உள்ள ரேடியோ கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டர். ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் சம்பளம். காலை பத்துமணிக்கு சென்றால் இரவு 9 மணி ஆகும். ஒரு ரூபாய் தினசரி பேட்டா. அதில்தான் என்னுடைய காலை ம்ற்றும் பகல் உணவை பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போது அது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஒரு இட்லி 5 பைசா, தோசை 15பைசா. காபி 10 பைசா. இந்த விலை உடுப்பி ஓட்டலில். அப்போது எல்லோருமே உடுப்பி ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். அந்த ஒரு ரூபாயிலும் மீதி இருக்கும். அதை சேர்த்துவைத்து ஞாயிற்று கிழமைகளில் திரைப்படம் பார்ப்பேன். திரைப்படம் பார்க்க 60 பைசா அல்லது 80 பைசா இருந்தால் போதும். அப்பா ராயப்பேட்டையில் இருந்த ஒரு அப்பள கம்பெனியில், பாக்கட்டுகளை சைக்கிளில் சென்று கடைகளுக்கு விநியோகிக்கும் வேளையில் சேர்ந்தார். நானும் அவரும் அந்த கம்பெனியில் தங்கிக்கொள்ள அனுமதி பெற்றார். முதல்நாள் காலை எனக்கு டிபன் வாங்கிக்கொடுத்து, கடையில் விட்டு சென்றார். திரும்ப வரும் வழியையும் சொல்லிக்கொடுத்தார். இரவு 9 மணிக்கு நான் கடையில் இருந்து புறப்பட்டு அங்கு சென்றேன். இரவு உணவு அங்குதான். முகம் கழுவி சாப்பிட உட்கார்ந்தேன். ஒரு அலிமினிய தட்டில் குவியலாக சோறும், அதன்மேல் சிறிய கிண்ணத்தில், ஒரு பெரிய துண்டு மீனுடன் குழம்பும் இருந்தது. நான் ஓ வென்று அழ ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால், நான் அதுவரை மீன் குழம்பு சாப்பிட்டதில்லை. அன்று இரவு எப்படியோ கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. ஊரில் நான் கணித்தில் அதி மதிப்பெண் (96/100) பெற்றதற்காக, பள்ளியில் விழா நடத்தி பரிசுகள் வழங்கி உள்ளனர். நான் அங்கு இல்லாததால் அம்மா மேடையேறி அந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அப்பொதெல்லாம் அஞசல் அட்டைதான் தொடர்பு சாதனம். செய்தி வந்துசேர ஒருவாரம் ஆகும். அவசர செய்தி என்றால், அஞ்சல் அலுவலகம் சென்று ‘டிர்ங்கால்’ புக் செய்து காத்திருக்க வேண்டும். (அதுவும் நம் ஊரில் அஞ்சல் அலுவலகம் இருக்கவேண்டும், அல்லது யார் வீட்டிலாவது தொலைபேசி இருக்கவேண்டும். அப்போதுதான் தொடர்புகொள்ள முடியும்.) தொடர்பு கிடைத்தவுடன் சப்தமாக பேசவேண்டும். ரகசியமான விசயங்களைப் பேச முடியாது. பின்னர். நடுகுப்பம்.(லாயிட்ஸ் சாலை கடற்கரை முனை) பகுதியில் மாதம் 40 ரூபாய் வாடகைக்கு (கழிவறை கிடையாது. குளியல் அறை மட்டும் உண்டு.) ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார். அம்மா, அண்ணன் தங்கை மூவரும் வந்துசேர்ந்தார்கள். அதன் பின்னர் நான் வேலை செய்த கடை பிடிக்காமல். அப்பாவின் பழைய ந்ண்பரின், வெலிங்டன் திரை அரங்கின் முன்னால் இருந்த ’ஜெய்சி பிரத்ர்ஸ்’ என்ற பல்பொருள் கடையில் சேர்த்துவிட்டார். அண்ணன் லாட்டரி சீட்டு கடை நடத்தும் ஒருவரிடம், வேலைக்கு சேர்ந்தார்.
அவருக்கு மூன்றரை ரூபாய் சம்பளம். அனால், ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தால் சொந்தமாக கடை வைக்கலாம். ஆனால் அதற்கு வழி தெரியவில்லை. லஸ் கார்னரில் அவர் கடை. கடை என்றால் ஏதோ என்று நினைக்க வேண்டாம். ஒரு சிறிய பிளைவுட் ஸ்டாண்ட், கொஞ்சம் பேபர் கிளிப்புகள். சாலையோர நடைபாதையில்தான் கடை. பின்னர் நான், ம்ற்றும் ந்ண்பர் ஒருவர் ஆக மூன்றுபேர் அங்கு சேர்ந்தோம்.