7
ஒருவாறாக நானும் அப்பாவும் லாரியைப் பிடித்து சென்னைக்கு ’68 ஆக்ஸ்ட் 15 அன்று வந்து சேர்ந்தோம். கோடம்பாக்கத்தில், அப்பாவின் நண்பரின் வீட்டில் (ஒரு அறை, ஒரு அடுப்படி) தங்கினோம். அன்று மாலை அன்றைய முதல்வர் அண்ணா அவர்கள் பேசிய கூட்டத்திற்கு அப்பா அழைத்து சென்றார். இரண்டு நாட்கள் என்னை விட்டுவிட்டு அப்பா மட்டும் வெளியில் சென்றுவந்தார். மூன்றாம் நாள் என்னை அழைத்துக்கொண்டு மவுண்ட் ரோட் (த்ற்போதய அண்ணா சாலை) அகூர்சந் கட்டிடத்தில் (காயிதேமில்லத் கல்லூரி எதிரில் உள்ள சிவப்பு கட்டிடம்) உள்ள ரேடியோ கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டர். ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் சம்பளம். காலை பத்துமணிக்கு சென்றால் இரவு 9 மணி ஆகும். ஒரு ரூபாய் தினசரி பேட்டா. அதில்தான் என்னுடைய காலை ம்ற்றும் பகல் உணவை பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போது அது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஒரு இட்லி 5 பைசா, தோசை 15பைசா. காபி 10 பைசா. இந்த விலை உடுப்பி ஓட்டலில். அப்போது எல்லோருமே உடுப்பி ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். அந்த ஒரு ரூபாயிலும் மீதி இருக்கும். அதை சேர்த்துவைத்து ஞாயிற்று கிழமைகளில் திரைப்படம் பார்ப்பேன். திரைப்படம் பார்க்க 60 பைசா அல்லது 80 பைசா இருந்தால் போதும். அப்பா ராயப்பேட்டையில் இருந்த ஒரு அப்பள கம்பெனியில், பாக்கட்டுகளை சைக்கிளில் சென்று கடைகளுக்கு விநியோகிக்கும் வேளையில் சேர்ந்தார். நானும் அவரும் அந்த கம்பெனியில் தங்கிக்கொள்ள அனுமதி பெற்றார். முதல்நாள் காலை எனக்கு டிபன் வாங்கிக்கொடுத்து, கடையில் விட்டு சென்றார். திரும்ப வரும் வழியையும் சொல்லிக்கொடுத்தார். இரவு 9 மணிக்கு நான் கடையில் இருந்து புறப்பட்டு அங்கு சென்றேன். இரவு உணவு அங்குதான். முகம் கழுவி சாப்பிட உட்கார்ந்தேன். ஒரு அலிமினிய தட்டில் குவியலாக சோறும், அதன்மேல் சிறிய கிண்ணத்தில், ஒரு பெரிய துண்டு மீனுடன் குழம்பும் இருந்தது. நான் ஓ வென்று அழ ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால், நான் அதுவரை மீன் குழம்பு சாப்பிட்டதில்லை. அன்று இரவு எப்படியோ கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. ஊரில் நான் கணித்தில் அதி மதிப்பெண் (96/100) பெற்றதற்காக, பள்ளியில் விழா நடத்தி பரிசுகள் வழங்கி உள்ளனர். நான் அங்கு இல்லாததால் அம்மா மேடையேறி அந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அப்பொதெல்லாம் அஞசல் அட்டைதான் தொடர்பு சாதனம். செய்தி வந்துசேர ஒருவாரம் ஆகும். அவசர செய்தி என்றால், அஞ்சல் அலுவலகம் சென்று ‘டிர்ங்கால்’ புக் செய்து காத்திருக்க வேண்டும். (அதுவும் நம் ஊரில் அஞ்சல் அலுவலகம் இருக்கவேண்டும், அல்லது யார் வீட்டிலாவது தொலைபேசி இருக்கவேண்டும். அப்போதுதான் தொடர்புகொள்ள முடியும்.) தொடர்பு கிடைத்தவுடன் சப்தமாக பேசவேண்டும். ரகசியமான விசயங்களைப் பேச முடியாது. பின்னர். நடுகுப்பம்.(லாயிட்ஸ் சாலை கடற்கரை முனை) பகுதியில் மாதம் 40 ரூபாய் வாடகைக்கு (கழிவறை கிடையாது. குளியல் அறை மட்டும் உண்டு.) ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார். அம்மா, அண்ணன் தங்கை மூவரும் வந்துசேர்ந்தார்கள். அதன் பின்னர் நான் வேலை செய்த கடை பிடிக்காமல். அப்பாவின் பழைய ந்ண்பரின், வெலிங்டன் திரை அரங்கின் முன்னால் இருந்த ’ஜெய்சி பிரத்ர்ஸ்’ என்ற பல்பொருள் கடையில் சேர்த்துவிட்டார். அண்ணன் லாட்டரி சீட்டு கடை நடத்தும் ஒருவரிடம், வேலைக்கு சேர்ந்தார்.
அவருக்கு மூன்றரை ரூபாய் சம்பளம். அனால், ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தால் சொந்தமாக கடை வைக்கலாம். ஆனால் அதற்கு வழி தெரியவில்லை. லஸ் கார்னரில் அவர் கடை. கடை என்றால் ஏதோ என்று நினைக்க வேண்டாம். ஒரு சிறிய பிளைவுட் ஸ்டாண்ட், கொஞ்சம் பேபர் கிளிப்புகள். சாலையோர நடைபாதையில்தான் கடை. பின்னர் நான், ம்ற்றும் ந்ண்பர் ஒருவர் ஆக மூன்றுபேர் அங்கு சேர்ந்தோம்.
No comments:
Post a Comment